SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

என்எல்சியில் நிதித்துறை தேசிய கருத்தரங்கம்

2/19/2018 10:25:02 AM

நெய்வேலி, பிப். 19: நெய்வேலியில், தி இன்ஸ்டியூட் ஆப் காஸ்ட் அக்கவுன்டன்ஸ், தி இன்ஸ்டியூட் ஆப் சார்ட்டர்டு அக்கவுன்டன்டன்ஸ் மற்றும் தி இன்ஸ்டியூட் ஆப் கம்பெனி செக்ரட்டிரீஸ் ஆகியவை என்எல்சி இந்தியா நிறுவனத்துடன் இணைந்து, நிதித்துறை தொடர்பான தேசிய கருத்தரங்கு, கற்றல் மற்றும் மேம்பாட்டு மையத்தில் நடந்தது. என்எல்சி இந்தியா நிதித்துறை செயல் இயக்குநர் சந்திரசேகரன் வரவேற்றார். என்எல்சி இந்தியா நிறுவன தலைவர் சரத்குமார்ஆச்சார்யா தலைமை தாங்கினார். லட்சுமி குமரன் மற்றும் ஸ்ரீதரன் சட்ட நிறுவனத்தின் பங்குதாரரும், வழக்கறிஞருமான லட்சுமிகுமரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். தலைசிறந்த தொழில் ரீதியிலான அமைப்புகளின் பிரதிநிதிகள் ஜெகன்மோகன்ராவ், அகலாதராவ்,

ஸ்ரீபிரியாகுமார் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள். என்எல்சி இந்தியா இயக்குநர்கள் சுபீர்தாஸ், செல்வகுமார், விக்ரமன், கண்காணிப்புத்துறை தலைமை அதிகாரி வெங்கடசுப்ரமணியன் உட்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக மத்திய ரயில்வே மற்றும் நிலக்கரித்துறை அமைச்சர் பியூஷ்கோயல், மத்திய நிலக்கரித்துறை செயலர் சுசில் குமார், மத்திய நிதித்துறையின் முதலீடு மற்றும் பொது சொத்து நிர்வாகத்துறை செயலர் நீரஜ்குமார்குப்தா ஆகியோர் வழங்கிய வாழ்த்து செய்திகள் விழாவில் வாசிக்கப்பட்டது. தலைமை பொதுமேலாளர் மதிவாணன் நன்றி கூறினார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ramnathgovind

    மியான்மரில் அதிபர் ஆங் சான் சூகியுடன் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு

  • GuangxiZhuangcele

    தெற்கு சீனாவின் குவாங்ஸி ஜுவாங் தன்னாட்சி பிரதேசத்தின் 60வது ஆண்டு விழா கொண்டாட்டம்

  • chinaexpo

    சீனாவின் பொருளாதார சீர்திருத்தத்தின் 40ம் ஆண்டு நிறைவு விழா: லண்டனில் புகைப்பட கண்காட்சி

  • londonbrexit

    சர்வதேச நாடுகளுடனான பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் மக்கள் போராட்டம்

  • mexicomigrant

    மெக்ஸிகோவின் எல்லையான டிஜூயனா பகுதியில் முகாமிட்டுள்ள அகதிகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்