SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதிய ரக எள் விதை விவசாயிகளுக்கு வழங்கல்

2/19/2018 10:23:43 AM

குறிஞ்சிப்பாடி, பிப். 19: விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில், இந்த வருடம் யுஆர்ஐ-3 என்ற வெள்ளை ரக எள், சமீபத்தில் கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வெள்ளை எள், விதை பெருக்கு மற்றும் உற்பத்தி  திட்டத்தின் கீழ், குறிஞ்சிப்பாடி பகுதியில் விவசாயிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் கண்ணன் அறிவுரைப்படி, முனைவர் நடராஜன், மண்டல ஆராய்ச்சி நிலைய தலைவர் பேராசிரியர் உஷாராணி ஆகியோர் தலைமை தாங்கினர்.குறிஞ்சிப்பாடி பகுதியை சேர்ந்த 30 விவசாயிகளுக்கு, புதிய வெள்ளை ரக எள், தலா 1 கிலோ வீதம் 30 கிலோ முழு மானியத்தில் வழங்கப்பட்டது. அயன்குறிஞ்சிப்பாடி உழவர் மன்ற தலைவர் ராமலிங்கம் உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.  



தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-03-2019

    25-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-03-2019

    24-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-03-2019

    23-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • SuperWormMoon

    2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்

  • sharkpalne

    உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்