SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிறுவர்களுக்கான தொடர் ஓட்டப்போட்டி

2/19/2018 10:23:19 AM

கடலூர், பிப். 19: கடலூர் மவுண்ட் லிட்டரா ஸி பள்ளியில் நண்பர்களுடனான கிடத்தான் தொடர் ஓட்டப்போட்டி கடலூர் வெள்ளிக் கடற்கரையில் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இப்பள்ளி மாணவர்களுடன் மற்ற பள்ளி மாணவர்களும் சேர்த்து 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். கடலூர் காவல் துணை கண்காணிப்பாளர் லாமெக் சிறந்து விருந்தினராக கலந்து கொண்டு கொடியசைத்து இந்நிகழ்வினை துவக்கி வைத்தார். பள்ளி தாளாளர் மருத்துவர் கண்ணன், கவிதாகண்ணன் மற்றும் பள்ளி முதல்வர் சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இப்போட்டி 3 முதல் 5 வயது வரை, 6 முதல் 8 வயது வரை, 9 முதல் 12 வயது வரை, 13 முதல் 14 வயது வரை என நான்கு பிரிவாக நடத்தப்பட்டது. இப்போட்டியில் வெற்றி பெற்ற முதல் மூன்று மாணவர்கள், மாணவிகள் என தனித்தனியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, கடலூர் காவல் துணை கண்காணிப்பாளர் லாமெக் மற்றும் மருத்துவர் கண்ணன் ஆகியோர் பரிசு மற்றும் சான்றிதழை வழங்கினர். மேலும் இப்போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.



தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

  • hungary_policepadhuga11

    புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்

  • ThaiSanctuaryPiano

    யானைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்வு பெற பியானோ வாசிக்கும் கலைஞர்: தாய்லாந்தில் வியப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்