SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அளித்த உறுதிமொழியின்படி என்எல்சி நிறுவனம் நிரந்தர பணி வழங்க வேண்டும்

2/19/2018 10:23:12 AM

கடலூர், பிப். 19:  கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் எம்எல்ஏ  வெளியிட்டுள்ள அறிக்கை:இந்திய பொதுத்துறை நிறுவனங்களில் அதிக லாபம் ஈட்டக்கூடிய என்எல்சி நிறுவனம் துவக்கப்பட்டபோதும், அதன் விரிவாக்கத்திற்காகவும் வளர்ச்சிக்காகவும் வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்கிற உத்தரவாதத்தை என்எல்சி நிறுவனம் உறுதியளித்தது. ஆனால் கடந்த சில வருடங்களாக என்எல்சி நிர்வாகம் தன் உறுதிமொழியை நிறைவேற்றாமல் அதனை கைவிடப்பட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்.

மேலும், விவசாயத்தை மட்டுமே தன்னுடைய வாழ்வாதாரமாக கொண்ட என்எல்சியை சுற்றியுள்ள கிராம மக்கள் அனைத்தையும் இந்நிறுவனத்திற்காக இழந்துள்ளனர். இந்நிலையில், அவர்களில் மிகக்குறைந்த அளவில் ஒப்பந்த தொழிலாளர்களாக வேலையில் சேர்ந்து உழைத்து வருவதோடு அரைகுறை வயிற்றோடு வாழ்க்கை நடத்தி வருகின்றனர். மற்ற மத்திய அரசின் நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், ஏன் மாநில அரசு நிறுவனங்களில் கூட வேலையில் இருப்பவர் இறந்துவிட்டால் கருணை அடிப்படையில் தகுதி வாய்ந்த அவரது வாரிசுகளுக்கு வேலை கொடுப்பது வழக்கமான அரசு நிகழ்வாகும். ஆனால் என்எல்சி நிறுவனத்தில் அதை கூட செயல்படுத்தாமல் பணியின்போது இறந்தவரின் குடும்பத்தை அலைக்கழிப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

 தற்சமயம் என்எல்சி நிறுவனத்தில் ஆட்குறைப்பு என்ற பெயரில் நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைத்து அந்த வேலை பளுவை மற்றவர்கள் மேல் திணித்து வருகிறது. இதனால் நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களின் பணிச்சுமையின் காரணமாக ஒருவித மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். என்எல்சி நிர்வாகத்தின் இந்த போக்கு வருத்தமளிப்பதாகவும் உள்ளது. இந்த காரணங்களால் 40 வயதில் நிரந்தரம் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் மன அழுத்தம் காரணமாக இறப்பது சர்வ சாதாரணமாக உள்ளது.

எனவே, என்எல்சி நிறுவனத்தில் பணி செய்யுமிடத்தில் பணியின் போது உடல்நலக்குறைவால் இறந்தாலும், அவரது குடும்பத்தில் தகுதி வாய்ந்த நபர்களுக்கு நிரந்தர தொழிலாளியாக வேலை கொடுத்து அந்த குடும்பத்திற்கு ஆதரவாக இருக்க வேண்டும். மேலும் என்எல்சி நிறுவனத்திற்கு வீடு, நிலம் வழங்கியவர்களுக்கு உடனடியாக உரிய இழப்பீடும் மற்றும் பணியும் வழங்க வேண்டும். அதே போல் பணியின்போது இறந்தவர்களுக்கும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் என்எல்சி நிறுவனத்தில் அப்ரண்டீஸ் முடித்தவர்களுக்கும், உரிய பணியை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 15-12-2018

  15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • AmazonIllegalMining

  அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

 • chinasnowfall

  கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

 • hungary_policepadhuga11

  புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்

 • ThaiSanctuaryPiano

  யானைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்வு பெற பியானோ வாசிக்கும் கலைஞர்: தாய்லாந்தில் வியப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்