SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பேருந்தில் ஏற முயன்றவரிடம் பிக்பாக்கெட் அடித்த 2 பெண்கள் கைது

2/19/2018 10:22:49 AM

கள்ளக்குறிச்சி, பிப். 19: திருக்கோவிலூர் அடுத்த விளந்தை கிராமத்தை சேர்ந்த முருகன் மனைவி சரளா(23).  இவர் நேற்று மதியம் கள்ளக்குறிச்சி பஸ்நிலையத்தில் சேலம் செல்வதற்கு பேருந்தில் ஏறினார். அப்போது, கூட்ட நெரிசலை பயன்படுத்தி சரளா கட்டை பையில் வைத்திருந்த மணிபர்சை பெண் ஒருவர் திருட முயன்றார். இதை கவனித்த சரளா உடனே கூச்சலிட்டார். அப்போது, மணிபர்சை எடுத்த பெண்ணும், அவருடன் மற்றொரு பெண்ணும் அங்கிருந்து தப்பிக்க முயன்றனர். அவர்களை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் விசாரணையில், அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் பழையபேட்டை கிராமத்தை சேர்ந்த சிவா மனைவி பாரதி(22), அதே ஊரை சேர்ந்த சீனுவாசன் மகள் முனியம்மாள்(30) என்பதும் தெரியவந்தது. சரளா பர்சை பாரதி திருடி முனியம்மாளிடம் கொடுத்துள்ளார். அதில், ரூ.1500 பணம் இருந்துள்ளது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சரளா கள்ளக்குறிச்சி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் கொளஞ்சிநாதன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

  • hungary_policepadhuga11

    புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்

  • ThaiSanctuaryPiano

    யானைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்வு பெற பியானோ வாசிக்கும் கலைஞர்: தாய்லாந்தில் வியப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்