SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விவசாயிகள் பணத்தை செலுத்திய பிறகும் உழவர் பணி கூட்டுறவு சங்கத்தில் அடகு நகைகளை தராமல் அலைக்கழிப்பு லாக்கர் சாவி தொலைந்ததாக நாடகம்

2/14/2018 11:06:45 AM

தண்டராம்பட்டு எச்எச் 610 உழவர் பணி கூட்டுறவு சங்கத்தில் அடகு வைத்த நகைகளை பணம் செலுத்தியும் திரும்ப பெற முடியாமல் விவசாயிகள் அலைக்கழிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

தண்டராம்பட்டு டேம் ரோட்டில் எச்எச் 610 உழவர் பணி கூட்டுறவு சங்கம் இயங்கி வருகிறது. இதில் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். இதில் தண்டராம்பட்டு சுற்றுவட்டாரங்களை சேர்ந்த மக்கள் விவசாயத்திற்கு தேவைப்படும் உரம், யூரியா, பூச்சி மருந்து, குறைந்த வட்டியில் நகைக் கடன்களை பெற்று வருகின்றனர்.

சங்கத் தலைவராக விஜயாதேவேந்திரன் உள்ளார். இயக்குனராக பழனியும், நகை மதிப்பீட்டாளராக ஜெயலட்சுமியும் பணிபுரிந்து வருகிறார்கள். தண்டராம்பட்டு எச்எச் 610 உழவர் பணி கூட்டுறவு சங்கத்தில் ஒரு நாளைக்கு 5 ேபர் வரை நகைகளை வைத்து கடன் பெற்று செல்கின்றனர். அதேபோல் அசல் வட்டியுடன் சேர்த்து கடனை செலுத்தி நகைகளை மீட்டு ெசல்கின்றனர்.

இந்நிலையில், கடந்த 7ம் தேதி முதல் 20க்கும் மேற்பட்ட நகைகளை அடகு வைத்து கடன் பெற்ற விவசாயிகள் நகை கடனுக்கான அசலும், வட்டியும் சேர்த்து கட்டியும் 7 நாட்களாக அவர்களது நகைகளை திருப்பி வழங்காமல் அலைக்கழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நகைகளை கேட்கும் விவசாயிகளிடம், ‘லாக்கர் சாவி தொலைந்து விட்டது. அது கிடைத்ததும் லாக்கரில் உள்ள நகைகளை திருப்பி தருகிறோம். ஆகவே இன்று வா, நாளை வா, நாளை மறுநாள் வா’ என்று அலைக்கழித்து நாடகமாடுகின்றனர்.

சங்க தலைவரின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவதால், எங்கள் நகைகளின் நிலை என்னவென்று தெரியவில்லை. நகைகளை கையாடலும் செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, எங்கள் நகைகள் திரும்ப கிடைக்காவிட்டால் கலெக்டர் அலுவலகம் முன் தீக்குளிப்போம்’ என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-02-2018

    25-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • jeyalalithabdystatue

    ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் முழுஉருவ வெண்கல சிலை திறப்பு

  • SouthAfricaCapitalWater

    உச்சக்கட்ட வறட்சியை தொட்ட கேப் டவுன் நகரம்: தண்ணிரின்றி வறண்டு கிடக்கும் நிலங்கள்

  • somalia_bomb_blast

    சோமாலியாவில் இரட்டைக் கார் குண்டு தாக்குதல்: 18 பேர் உயிரிழப்பு

  • sirya_dead123

    சிரியாவில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசுப் படையினர் தொடர் தாக்குதல் : 5 நாளில் 400 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X