SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருமணமான இளம்பெண்ணை கத்தியால் குத்திய ராணுவவீரர் கைது தண்டராம்பட்டில் பரபரப்பு காதல் தகராறில் பயங்கரம்

2/14/2018 11:06:36 AM

தண்டராம்பட்டு, பிப்.14: தண்டராம்பட்டு பகுதியில் காதல் தகராறில் திருமணமான இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு பகுதியை சேர்ந்தவர் பச்சையப்பன்(28). இவர் கடந்த 6 ஆண்டுகளாக ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண்ணும் 7 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இளம்பெண்ணுக்கு, ராதாபுரத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவருடன், அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். அவர்களுக்கு, தற்போது ஒன்றரை வயது குழந்தை உள்ளது. திருமணத்திற்கு பிறகும் இளம்பெண்ணும், பச்சையப்பனும் செல்போனில் அடிக்கடி பேசிவந்துள்ளனர்.

இந்நிலையில், பச்சையப்பன் விடுமுறையில் நேற்று முன்தினம் காலை சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் வீட்டிற்கு சென்று இளம்பெண்ணை சந்தித்து, உனது கணவனை விட்டுவிட்டு என்னை திருமணம் செய்து கொள். உன்னையும், உனது குழந்தையையும் நான் காப்பற்றுகிறேன் என்று கூறி உள்ளார். இதற்கு இளம்பெண் எந்த பதிலையும் கூறவில்லையாம்.

இதற்கிடையில், நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில், நடந்த சம்பவத்தை தனது கணவர் சிவக்குமாரிடம், இளம்பணெ் கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர், மனைவியை அழைத்துக் கொண்டு பச்சையப்பன் வீட்டிற்கு சென்றார். அங்கிருந்த பச்சையப்பனிடம், இனிமேல் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட வேண்டாம் என எச்சரித்தார்.

அப்போது இளம்பெண் ‘நான் உன்னை காதலிக்கவில்லை. நீதான் காதலித்து வருகிறாய்’ என்று கூறி உள்ளார். அப்போது, சிவக்குமாருக்கும், பச்சையப்பனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த பச்சையப்பன், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து இளம்பெண்ணை சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடினார்.

ரத்த வெள்ளத்தில் சரிந்த இளம்பெண்ணை அங்கிருந்தவர்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமனையில் சேர்த்தனர். மேலும், தப்பியோடிய பச்ைசயப்பனை அப்பகுதி மக்கள் பிடித்து தண்டராம்பட்டு போலீசில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து ராணுவ வீரர் பச்சையப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் தகராறில் இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bunfestival

    ஹாங்காங்கில் பார்வையாளர்கள் வியக்க வைக்கும் ரொட்டி திருவிழா : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

  • metrochennai

    சென்னையில் நேரு பூங்கா முதல் சென்ரல் வரையிலான மெட்ரோ ரயில் பணிகள் தீவிரம்

  • protest_chennai123

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தென் சென்னை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

  • satteravai_stalin11

    சட்டப்பேரவை முன் தர்ணா போராட்டத்த்தில் ஈடுபட்ட ஸ்டாலின் குண்டுக்கட்டாக கைது

  • PakistanistudentUSgunshot

    அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் பலியான பாகிஸ்தான் மாணவி உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்