SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருவண்ணாமலை மாவட்டத்தில் சிவன் கோயில்களில் மகா சிவராத்திரி கோலாகலம் விடிய, விடிய கண் விழித்து பக்தர்கள் வழிபட்டனர்

2/14/2018 11:06:21 AM

செய்யாறு, பிப்.14: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் மகா சிவராத்திரி விழா நேற்று வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. பக்தர்கள் விடிய, விடிய கண் விழித்து வழிபட்டனர்.

செய்யாறு நகரில் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற வேதபுரீஸ்வரர் கோயிலில் தீப வழிபாட்டு குழுவினரால் சிவபெருமான், திருமாலுக்கு சக்கரம் வழங்கும் அற்புத காட்சி உப்பால் வடிவமைக்கப்பட்டிருந்தது. இதனை பக்தர்கள் ஆர்வத்துடன், பக்தியுடன் வழிபட்டனர்.

அதேபோல், பட்சீஸ்வரர் கோயில், நந்தீஸ்வரர் கோயில் உள்ளிட்ட சிவன் கோயில்களில் சுவாமி, அம்மன், நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

மேலும், வெம்பாக்கம் தாலுகா, அரசங்குப்பம் கிராமத்தில் காசி விஸ்வநாதர் கோயில், கூழமந்தல் கிராமத்தில் கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோயில், திருபனங்காடு தாளபுரீஸ்வரர் கோயில், செய்யாற்றை வென்றான், அனப்பத்தூர், புரிசை, பைங்கினர், அத்தி உள்ளிட்ட கிராம பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் மகா சிவராத்திரி வழிபாடு நடந்தது.

அதேபோல், ஆரணி கோட்டை கைலாயநாதர் கோயில், பர்வதமலை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோயில், வந்தவாசி தவளகிரீஸ்வரர் கோயில், தேவிகாபுரம் கனகபுரீஸ்வரர் கோயில் உள்ளிட்ட சிவன் கோயில்களில் நடந்த சிவராத்திரி வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மகா சிவராத்திரியையொட்டி சிவன்கோயில்களில் ஏராளமான பக்தர்கள் விடிய விடிய கண்விழித்து வழிபட்டனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bunfestival

    ஹாங்காங்கில் பார்வையாளர்கள் வியக்க வைக்கும் ரொட்டி திருவிழா : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

  • metrochennai

    சென்னையில் நேரு பூங்கா முதல் சென்ரல் வரையிலான மெட்ரோ ரயில் பணிகள் தீவிரம்

  • protest_chennai123

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தென் சென்னை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

  • satteravai_stalin11

    சட்டப்பேரவை முன் தர்ணா போராட்டத்த்தில் ஈடுபட்ட ஸ்டாலின் குண்டுக்கட்டாக கைது

  • PakistanistudentUSgunshot

    அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் பலியான பாகிஸ்தான் மாணவி உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்