SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மகா சிவராத்திரி விழா சிவன் கோயில்களில் இன்று விடிய, விடிய அபிஷேகம்

2/13/2018 10:54:58 AM

சேலம், பிப்.13:  மகா சிவராத்திரியையொட்டி, சிவன் கோயில்களில் இன்று (13ம் தேதி) இரவு விடிய, விடிய சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனைகள் நடக்கிறது. மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி, மகா சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. மகா சிவராத்திரியையொட்டி சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் இன்றிரவு சிவன், அம்பாளுக்கு பால், தயிர், குங்குமம், மஞ்சள், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம், சந்தனம் உள்ளிட்ட 32 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.  

இன்றிரவு 8 மணிக்கு முதல் ஜாம கால அபிஷேகம் நடக்கிறது. இதில் சுகவனேஸ்வரர், சொர்ணாம்பிகை அம்மனுக்கு தங்கக்கவசம் சாத்துப்படி நடக்கிறது. 11 மணிக்கு இரண்டாம் ஜாமகால அபிஷேகம், புஷ்ப அலங்காரமும், நள்ளிரவு 1.30 மணிக்கு மூன்றாம் ஜாமகால அபிஷேகம், தாழம்பூ அலங்காரமும், அதிகாலை 4 மணிக்கு நான்காம் ஜாமகால அபிஷேகம், வெள்ளிக்கவசம் சாத்துப்படி நடக்கிறது. நாளை (14ம் தேதி) காலை 5 மணி அபிஷேகம், 5.30 மணிக்கு மகா தீபாராதனைகள் நடக்கிறது.

அதன்பின் சிவன், அம்பாளுக்கு சிறப்பு அலங்கார ஆராதனைகள் நடக்கிறது. இந்நிகழ்ச்சியின் போது, கோயில்களில் பக்தர்கள் விடிய, விடிய கண்விழித்து தேவாரம், திருவாசகம் பாடுவது வழக்கம்.  தாரமங்கலம் கைலாசநாதர் கோயில், பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோயில், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோயில், காசிவிஸ்வநாதர் கோயில், ஆறகளூர் சிவன் கோயில் உள்பட சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து  சிவன் கோயில்களிலும் சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • trans_porattam

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான படுகொலையை கண்டித்து பிணம் போல் படுத்து திருநங்கைகள் நூதன போராட்டம்

  • neru_park_chinnamalai11

    நேரு பூங்கா - சென்ட்ரல் மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா!

  • stalin_dmk11

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் சாலை மறியல்

  • PlasticawarenessLondon

    லண்டன் பூங்காவில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி

  • stalin_arrestkaithu11

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மதுராந்தகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் கைது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்