முதல் கணவனுக்கு திருமண ஏற்பாடு நடந்ததால் 2வது கணவனுடன் வசித்த இளம்பெண் தற்கொலை சேலத்தில் பரபரப்பு
2/13/2018 10:54:51 AM
சேலம், பிப்.13: சேலம் வீராணம் அருகே டி.பெருமாபாளையம் காந்திநகர் காலனியை சேர்ந்த கூலி தொழிலாளி பெருமாள்(30). இவருக்கும், வீரபாண்டியை சேர்ந்த பூமணி(22) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வினோத்குமார்(24) என்பவருடன் பூமணிக்கு பழக்கம் ஏற்பட்டது.
இது ஊர்மக்களுக்கு தெரியவந்ததால், சில மாதங்களுக்கு முன்பு ஊர் பஞ்சாயத்து கூட்டப்பட்டது. இதில், கணவன், மனைவியை பிரித்து வைத்த பஞ்சாயத்தார், வாலிபர் வினோத்குமாரையே பூமணி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட பெருமாளுக்கு ₹1.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறியது. அதன்படி, பெருமாளுக்கு ₹1.40 லட்சத்தை இழப்பீடாக கொடுத்த பூமணி, வினோத்குமாரை 2வது திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்தார்.
இந்நிலையில், பெருமாளுக்கு இன்னொரு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்தனர். இதையறிந்த பூமணி, கடந்த 4 நாட்களுக்கு முன் பெருமாள் வீட்டுக்கு சென்று, திருமண ஏற்பாடு குறித்து விசாரித்தார். ஆனால், அவரிடம் பெருமாள் பேச மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த பூமணி அதே பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனிடையே, ஆத்தூர் அருகே தலைவாசலுக்கு வேலைக்கு சென்று விட்டு வந்த 2வது கணவர் வினோத்குமார், மனைவியை காணாமல் தேடினார்.
நேற்று முன்தினம், பூமணி கிணற்றில் சடலமாக மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தகவலின் பேரில், சடலத்தை மீட்ட வீராணம் போலீசார் விசாரணை நடத்தினர். முதல் கணவருக்கு திருமணம் நடக்கும் வேதனையில் பூமணி தற்கொலை செய்து கொண்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் செய்திகள்
பனி, சுட்டெரிக்கும் வெயிலால் செடியிலேயே கருகும் குண்டுமல்லி மொட்டுகள்
ஆத்தூர் அருகே போலி வாரிசு சான்று மூலம் ₹50 லட்சம், 50 பவுன் மோசடி
சிறுமியை கடத்தி பலாத்காரம் போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது
நரசிங்கபுரம் நகராட்சியில் குடிநீர் வழங்கும் இயந்திரத்தை உடைக்க மர்ம நபர்கள் முயற்சி
காடையாம்பட்டி அருகே குடிநீர் கேட்டு கலெக்டரை கிராம மக்கள் முற்றுகை
நங்கவள்ளி அருகே அரசுத்துறை கண்காட்சியில் தெர்மாகோல் பயன்பாடு
16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்
பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு
முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு
டெல்லியில் ட்ரெயின் 18 'வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்'- ஐ கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி