SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொங்கணாபுரம் அருகே வீட்டை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்

2/13/2018 10:54:43 AM

இடைப்பாடி, பிப்.13:  கொங்கணாபுரம் அருகே, வீட்டை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கொங்கணாபுரம் ஒன்றியம் கோரணம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது எட்டிகுட்டை மேடு. இங்கு அரசு தொழில் மையம் அமைக்க, 16 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள், கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. முன்னதாக அங்கு குடியிருந்த ஒரு சில குடும்பத்தினருக்கு, வேறு இடத்தில் இடம் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் 4 குடும்பத்தினர் மட்டும், இடத்தை காலி செய்ய மறுப்பு தெரிவித்து, கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில் தாசில்தார் கேசவன், வருவாய் ஆய்வாளர் மதிஒளி, விஏஓ பாபு மற்றும் இடைப்பாடி போலீசார் நேற்று பொக்லைன் இயந்திரத்துடன் அங்கு சென்றனர். அங்கு, கந்தசாமி மனைவி நல்லம்மாள் என்பவரின் வீட்டை இடிக்க வந்திருப்பதாகவும், அதற்கான உத்தரவை கோர்ட் பிறப்பித்துள்ளதாகவும் தெரிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவர்களுடன் நல்லம்மாள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அவருக்கு ஆதரவாக பொதுமக்கள் சிலரும் திரண்டு வந்தனர். பின்னர், அவர்கள் வெள்ளாளபுரம் சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, வீட்டை காலி செய்ய 10 நாட்கள் கால அவகாசம் தருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் நல்லம்மாள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இதன் காரணமாக வீட்டை இடிக்காமல் அதிகாரிகள் திரும்பி சென்றனர். இதனால் அங்கு சுமார் 2 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • vaanvali_makal111

    நிலைகுலைந்துள்ள கேரளம்... வாழ்வாதாரத்தை இழந்து மக்கள் கடும் அவதி : மாநிலத்தின் வான்வழி படங்கள்

  • delta_kadai111

    காய்கிறது டெல்டா கடைமடைகள் ! : சிறப்பு படத் தொகுப்பு

  • prathmar_rajiv1

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளையொட்டி நினைவிடத்தில் குடும்பத்தினர், அரசியல் தலைவர்கள் மரியாதை

  • kerala_makkal111

    மழை குறைந்தும் தணியாத துயரம் : உணவு, தண்ணீருக்காக கேரள மக்கள் கையேந்தும் கொடுமை

  • 20-08-2018

    20-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்