SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மகனை கொன்றவரை கைது செய்ய வேண்டும் கலெக்டரிடம் பெற்றோர் மனு

2/13/2018 10:44:35 AM

திருச்சி,பிப்.13: மகனை கொலை செய்த முக்கிய குற்றவாளியை கைது செய்யக் கோரி குடும்பத்தினர் கலெக்டரிடம் நேற்று முறையிட்டனர்.திருச்சி மாவட்ட மக்கள் குறைதீர்நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் ராஜாமணி, டிஆர்ஓ பஷீர் ஆகியோர்  பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர். குடிநீர் விற்பனையாளர்கள் நலசங்கம் தலைவர் கந்தவேல் குமார், செயலாளர் ஹேமநாதன், பொருளாளர் வெங்கடேசன் ஆகியோர் அளித்துள்ள மனு:அரசின் சுமையை பகிர்ந்து கொள்ளும் வகையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை சந்தைகள், கடைகள் மற்றும் வீடுகளுக்கு நேரடியாக கொண்டு சேர்த்து அதன் மூலம் கிடைக்கும் சொ ற்ப வருமானத்தில் குடும்பம் நடத்தி வருகிறோம். சந்தைகள், பஜார்கள், கடை வீதிகள் போ ன்ற வற்றிற்கு குடிநீர் விநியோகிக்கும் போது மாநகராட்சி வரி வசூலிக்கும் ஒப்பந்த காரர் கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகிப்பாளர்களிடம் மரியாதை குறைவாகவும், அடாவடியாகவும் வசூலிக்கின்றனர்.

பாலுக்கு தரும் சிறப்பு சலுகைகள் போல் சுத்திரிக்கப்பட்ட குடிநீரையும் அத்தியாவசிய பொருளாக கருதி பாலுக்கு வழங்குவது போல் குடிநீருக்கும் வரி வசூலிப்பதில் விலக்கு அளிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.பாலக்கரை கீழப்புதுாரை சேர்ந்த அனி அளித்துள்ள மனு, கடந்த மாதம் 21ந்தேதி மூத்த மகன் ஹேமந்த்குமாரை கூலிப்படையினர் கொலை செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக கிருபாகரன் உள்பட 5 பேரை அரியமங்கலம் போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தில் உள்ள முக்கிய குற்றவாளியான வழக்கறி ஞர் ஒருவரை போலீசார் இதுவரை கைது செய்ய வில்லை.

சம்பவம் நடந்த 23 நாட்களாகி யும் போலீசார் சம்பந்தப்பட்ட வழக்கறிஞரை கைது செய்ய இன்ஸ்பெக்டர் நிக்சனுக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
டாக்டர், நர்ஸ் வேடத்தால் பரபரப்புபாமக மாவட்ட தலைவர் புருசோத்தமன், தனது தந்தை சாவுக்கு காரணமான மருத்துவர், செவிலியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி டாக்டர், நர்ஸ் வேடம் போட்டு 10 பேருடன்  கலெக்டர் அலுவலகத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில், தந்தை ஓய்வு பெற்ற பெல் ஊழியர் மணியன், கடந்த வருடம் டிசம்பர் 15ந்தேதி பெல் மருத்துவ மனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்த பின்னர் நாயை துாக்கி போடுவது போல் பெட்டில் உதவியாளர்கள் துாக்கி போட்டதில் மூச்சு பேச்சு இல்லாமல் இறந்து விட்டார். இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீசில் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. டாக்டர், நர்ஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • dussehraa_11

  நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

 • 20-10-2018

  20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • tirupathivavacha

  திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

 • kulasaidasaraeight

  வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

 • 18-10-2018

  18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்