SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஸ்மார்ட்சிட்டி உட்கட்டமைப்பு பணிகளுக்காக மலைக்கோட்டையை சுற்றியுள்ள தரைக்கடைகளை அகற்றக்கூடாது கலெக்டரிடம் முறையீடு

2/13/2018 10:44:25 AM

திருச்சி, பிப்.13:  திருச்சி மாநகரம் ஸ்மார்ட் சிட்டி உட்கட்டமைப்பு பணிகளுக்காக மலைக் கோட்டையில் சாலையோர தரைக்கடைகள் அப்புறப்படுத்தப்பட உள்ளதாக வந்த செய்தியை  தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் வியாபாரிகள் நேற்று குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.திருச்சி மாநகரம் ஸ்மார்ட் சிட்டி ஆக தரம் உயர்த்தப்பட தேர்வு செய்ய ப்பட்டு, மாநகர பகுதிகளின் உள்கட்டமைப்பிற்காக நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டு அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஸ்மார்ட் சிட்டி உட்கட்டமைப்பு பணிகளுக்காக மலைக்கோட்டையை சுற்றியுள்ள சாலையோர சிறு வியாபாரிகள் நடத்தி வரும் கடைகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட உள்ளதாக செய்தி பரவியது.

இந்நிலையில் நேற்று, மனிதநேய வர்த்தகர்கள் நல சங்கத்தின் திருச்சி மாவட்ட தலைவர் அஹமது தலைமையில் நிர்வாகிகள் மற்றும் சாலையோர சிறு வியாபாரிகள் என ஏராள மானோர் கலெக்டர் அலுவலகத்தில் குவிந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து வர்த்தகர்கள் நல சங்க நிர்வாகிகள் கூறுகையில்,  திருச்சி மாநகரம் ஸ்மார்ட் சிட்டி ஆக மாற வேண்டும் என்பதில் வியாபாரிகளுக்கு எந்தவித மாற்று கருத்தும் இல்லை. அதே சமயம் திருச்சி மாநகர் வளர்ச்சி பெறும்போது வியாபாரி களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது. ஸ்மார்ட் சிட்டி விரிவாக்க பணிகள் நடைபெறும் சமயத்தில் சாலையோர சிறு வியாபாரிகள் முன்னேற்றத்திற்கான நடவடிக்கை களும் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்.

மலைக்கோட்டையை சுற்றியுள்ள சாலையோர சிறு வியாபாரிகள் தற்சமயம் வியாபாரம் செய்து வரும் இடங்களிலேயே தொடர்ந்து வியாபாரம் செய்து வர அனுமதிக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலையோர சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாது காக்கும் விதமாக வியாபாரிகள் குறித்த கணக்கெடுப்பு மற்றும் அடையாள அட்டை வழங் கும் பணி முழுமைப்படுத்த கலெக்டர் உத்தரவிட வேண்டும் என்றனர்.இதைத் தொடர்ந்து வர்த்தக்கர்கள் நலச்சங்க முக்கிய நிர்வாகிகள் கலெக்டர் ராஜாமணியை சந்தித்து முறையிட்டனர். அப்போது கலெக்டர், வியாபாரிகள் உள்ளிடக்கிய திட்டமாக தான் உள்ளது. இது தொடர்பாக மனு கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • birdfestivalcanada

    கனடாவில் வான்கூவர் நகரில் நடைபெற்ற பறவை திருவிழாவில் பறவைகள் போல உடையணிந்து தன்னார்வலர்கள் பங்கேற்பு

  • militaryparangimalai

    ராணுவ வாகனங்கள், ஆயுதங்கள், யானை தந்தங்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் பரங்கிமலை ராணுவ பயிற்சி மையம்

  • guwahatidiadhani

    குவஹாத்தியில் தியோதானி திருவிழா கொண்டாட்டம் : விலங்குகளை பலி கொடுத்து பக்தர்கள் வழிபாடு

  • koreanwarmeet

    கொரிய போரின் போது குடும்பங்களை பிரிந்து சென்ற மக்கள் 65 ஆண்டுகளுக்கு பிறகு கண்ணீர்மல்க சந்திப்பு

  • srilankakitefestival

    இலங்கையில் பட்டம் திருவிழா கோலாகலம் : பல்லாயிரக்கணக்கானோர் வண்ணமயமான பட்டங்களுடன் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்