SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அனைவருக்கும் நூறுநாள் வேலை கேட்டு ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகை மண்ணச்சநல்லூரில் பரபரப்பு

2/13/2018 10:44:14 AM

மண்ணச்சநல்லூர், பிப்.13: திருப்பைஞ்சீலி ஊராட்சியைச் சேர்ந்த தேசிய ஊரக வேலை செய்யும் பெண் தொழிலாளர்கள் நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து மண்ணச்சநல்லூர் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.மண்ணச்சநல்லூர் ஒன்றியத்தில் உள்ளது திருப்பைஞ்சீலி ஊராட்சி. இந்த ஊராட்சியில் தேசிய ஊரக வேலைஉறுதி திட்டத்தில் நூறுநாள்வேலை 50 பேருக்கு மட்டும் சுழற்சி முறையில் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. ஒரு நாளைக்கு 50 பேருக்கு மட்டுமே வேலை வழங்கப்படுவதால் 100 நாட்கள் வேலை கிடைக்க வாய்ப்பில்லாமல் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி நேற்று திருப்பைஞ்சீலி ஊராட்சியைச் சேர்ந்த பெண்கள் நூற்றுக்கணக்கானோர் மண்ணச்சநல்லூர் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது தங்களுக்கு 100 நாட்கள் குறைவில்லாமல் வேலை வழங்க வேண்டும். தினமும் 50 பேருக்கு மட்டுமே வேலை என்பதை தளர்த்தி அதிகப்படியானவர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

அதற்கு வட்டார வளர்ச்சி அதிகாரி, அரசு நிதிநிலை காரணமாக ஊராட்சியில் ஒரு நாளைக்கு 50 பேருக்கு மட்டுமே கிராமத்தில் குளம், வாய்க்கால், ஏரி தூர்வாரும் பணி வழங்கப்படுகிறது. ஆனால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பண்ணைக்குட்டை அமைத்தல், மண்புழு உரம் தயாரித்தல் மற்றும் கொட்டகை அமைத்தல், மரக்கன்று நடுதல், பொதுப்பணித்துறைக்கு உட்பட்ட வாய்க்கால்களில் தூர்வாரும் பணி, தடுப்பணை கட்டுதல், பசுமை வீடுகளில் திறன்சாரா பணி மேற்கொள்ளுதல், தனிநபர் வயல்களில் வரப்பு கட்டுதல் உள்ளிட்ட பணிகள் வழங்கப்பட்டு வருகிறது.

எனவே இந்த பணிகளை செய்ய விரும்பும் பொதுமக்கள் ஒன்றிய அலுவலகத்தில் அதற்குரிய பொறுப்பு அலுவலர்களை அணுகி வேலை பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு விதிமுறைகள் குறித்து எடுத்துரைத்து சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.அதிகாரியின் சமரசத்தை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். மண்ணச்சநல்லூர் ஒன்றிய அலுவலகத்தை பெண் கூலி தொழிலாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • trans_porattam

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான படுகொலையை கண்டித்து பிணம் போல் படுத்து திருநங்கைகள் நூதன போராட்டம்

  • neru_park_chinnamalai11

    நேரு பூங்கா - சென்ட்ரல் மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா!

  • stalin_dmk11

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் சாலை மறியல்

  • PlasticawarenessLondon

    லண்டன் பூங்காவில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி

  • stalin_arrestkaithu11

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மதுராந்தகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் கைது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்