SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி விவசாயிகள் சாலை மறியல்

2/13/2018 10:42:03 AM

மேட்டுப்பாளையம், பிப்.13: மேட்டுப்பாளையம் அதனை சுற்றியுள்ள சிறுமுகை காரமடையை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த கத்தரிக்காய், வெண்டைகாய், அவரை உள்ளிட்ட காய்கறிகளை மேட்டுப்பாளையம் அன்னாஜீ ராவ் ரோட்டில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஏல மையத்தில் விற்பனை செய்வார்கள். இந்த இடத்தை கடந்த சில மாதங்களாக சிலர் ஆக்கிரமிப்பு செய்து கடை அமைத்துள்ளனர்.

இதனால், காய்கறி கொண்டு வரும் விவசாயிகள் அவற்றை விற்பனை செய்ய முடியவில்லை. மேலும், சாலையில் இறக்கி வைத்து விற்பனை செய்வதால் போக்குவரத்து இடையூறு ஆவதாக புகார் எழுந்தது. இந்நிலையில் நேற்று பல்வேறு கிராமங்களிலிருந்து காய்கறிகளை கொண்டு வந்த விவசாயிகள் அவற்றை விற்பனை செய்ய முடியாமல் சிரமப்பட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் தங்கள் வியாபாரம் செய்யும் இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால், அன்னா ஜீ ராவ் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு வந்த வட்டாட்சியர் ரங்கராஜ், இன்ஸ்பெக்டர் சென்னகேசவன் ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது இது தொடர்பாக பேச்சு நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்ததையடுத்து விவசாயிகள் சாலை மறியலை கைவிட்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • raavana_2018

    டெல்லியில் தசராவுக்கு ராவண உருவ பொம்மைகள் தயாரிப்பு!

  • delhi_skywalkopns

    டெல்லியில் பிரமாண்டமான ஐடிஓ நடை மேம்பாலம் திறப்பு !

  • 6thday_tirupathifestiv

    நவராத்திரி பிரம்மோற்சவம் 6 ஆம் நாள் : அனுமந்த வாகனத்தில் திருப்பதி மலையப்ப சுவாமி

  • odisa_andhratitli

    ஆந்திரா, ஒடிசாவில் 'தித்லி' புயல் தாண்டவமாடிய பேரழிவு புகைப்பட காட்சிகள் !

  • trumph_floodareaameric

    அமெரிக்காவின் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட டொனால்ட் டிரம்ப்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்