SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் 5 மாநகராட்சி பள்ளிகளை மேம்படுத்த டெண்டர்

2/13/2018 10:41:56 AM

கோவை, பிப்.13: மத்திய அரசின் ஸ்மார்ட்சிட்டி திட்டத்திற்கு கோவை மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. நகரின் குறிப்பிட்ட பகுதியை மேம்படுத்தும் திட்டம், நகர் முழுவதும் மேம்படுத்தும் திட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் நகரில் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் நகரின் குறிப்பிட்ட பகுதியை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் 16 வார்டுகளில் உள்ள 22 மாநகராட்சி பள்ளிகளை மேம்படுத்த மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் திட்டமிடப்பட்டது.

இந்த பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துதல், நவீன தொழில்நுட்பங்கள்படி பாடங்கள் கற்பித்தல் முறையை மேம்படுத்துதல், சோலார் வசதி ஏற்படுத்துதல், கம்ப்யூட்டர் சாப்ட்வேர் வசதி ஏற்படுத்துதல், ஆய்வுக்கூடங்கள், வகுப்பறைகள் மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.  மாநகராட்சி பள்ளிகளை மேம்படுத்தும் திட்டத்தில் முதல்கட்டமாக 5 பள்ளிகளையும், இரண்டாம் கட்டமாக 17 பள்ளிகளை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

23வது வார்டு சர்.சி.வி ராமன் சாலையிலுள்ள மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, பி.வி.பி மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, 24வது வார்டு மேற்கு சம்பந்தம் சாலையிலுள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆரோக்கியசாமி சாலையிலுள்ள மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, மாநகராட்சி சிறப்புப்பள்ளி ஆகிய ஐந்து பள்ளிகள் ‘ஸ்மார்ட்ஸ்கூல்ஸ்’ ஆக முதல்கட்டமாக மேம்படுத்தப்பட உள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில்,‘ ஸ்மார்ட்சிட்டியின் ஸ்மார்ட்ஸ் கூல்ஸ் திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக 5 பள்ளிகள் மேம்படுத்தப்பட உள்ளது. இதில் பல்வேறு அடிப்படை கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட உள்ளது. இதற்காக தொழில்நுப்பட்ப அனுமதி, நிர்வாக அனுமதி கிடைத்துவிட்டது. வரும் வாரத்தில் இத்திட்டத்தை செயல்படுத்த டெண்டர் தேதி அறிவிக்கப்படும். இதை தொடர்ந்து அடுத்தகட்டமாக மீதமுள்ள 17 மாநகராட்சி பள்ளிகள் மேம்படுத்தப்படும்,” என்றனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • trans_porattam

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான படுகொலையை கண்டித்து பிணம் போல் படுத்து திருநங்கைகள் நூதன போராட்டம்

  • neru_park_chinnamalai11

    நேரு பூங்கா - சென்ட்ரல் மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா!

  • stalin_dmk11

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் சாலை மறியல்

  • PlasticawarenessLondon

    லண்டன் பூங்காவில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி

  • stalin_arrestkaithu11

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மதுராந்தகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் கைது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்