SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருச்சி சாலையில் பாதாள சாக்கடைக்கு மண் மாதிரி ஆய்வு

2/13/2018 10:41:48 AM

கோவை, பிப்.13: மத்திய அரசின் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ், கோவை மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. முதல் இரு கட்டப்பணிகள் முடிந்து தற்போது மூன்றாவது கட்டமாக ரூ.143.65 கோடி மதிப்பீட்டில் 297.46 கிலோ மீட்டர் தூரத்திற்கு பாதாள சாக்கடை அமைக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருச்சி சாலையில் ராமநாதபுரம் அருகேயுள்ள அல்வேனியா பள்ளியில் இருந்து ஒண்டிப்புதூர் பாலம் வரை சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டு இருந்தது.

தேசிய நெடுஞ்சாலைத்துறையினரிடம் அனுமதி பெறுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, திருச்சி சாலையில் பாதாள சாக்கடை திட்டம் தாமதமானதாக கூறப்பட்டது. இந்நிலையில், திருச்சிசாலையில் 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த மாநகராட்சியால் டெல்லி தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையகத்திடம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அனுமதி பெறப்பட்டது. இந்த சாலையை தோண்டுவதற்கு கட்டணமாக ரூ.4.83 கோடி ரூபாய் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையகத்திற்கு கடந்த இரு மாதங்களுக்கு முன் செலுத்தப்பட்டது.

மொத்தமுள்ள 6 கிலோ மீட்டர் தூரத்தில் 2,450 மீட்டர் தூரத்திற்கு 1,600 எம்.எம் அளவு கொண்ட பெரிய பாதாள சாக்கடை குழாய்களும், 1,040 மீட்டர் தூரத்திற்கு 1,400 எம்.எம் அளவு கொண்ட பாதாள சாக்கடை குழாய்களும், 688 மீட்டர் தூரத்திற்கு 1,200 எம்.எம் அளவு கொண்ட பாதாள சாக்கடை குழாய்களும் அமைக்க மாநகராட்சியால் முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், பாதாள சாக்கடைப்பணிக்கான மண்பரிசோதனை உள்ளிட்ட அடிப்படை நடவடிக்கைகள் திருச்சிசாலையில் மாநகராட்சி நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில்,‘‘ திருச்சிசாலையில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக 6 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த சாலையில் ஆங்காங்கே மண்கள் மாதிரி சேகரிக்கப்பட்டு சென்னையில் உள்ள ஆய்வகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன் முடிவு சில நாட்களில் கிடைத்துவிடும். இம்முடிவுக்கு ஏற்ப தேவைப்படும் தாங்குதிறன் விகிதத்தில் சிமென்ட் பாதாள சாக்கடை குழாய்கள் தயாரிக்கும் பணி துவக்கப்படும். மார்ச் முதல்வாரத்தில் திருச்சிசாலையில் பாதாள சாக்கடை பணிகள் மாநகராட்சியால் துவக்கப்படும்,’ என்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • longestseabridge

    உலகில் எங்கும் இல்லாத தனிச்சிறப்புடன் கட்டி முடிக்கப்பட்ட உலகின் நீளமான கடல் பாலம்

  • delhi_strikepetrol18

    டெல்லியில் பெட்ரோல் பங்குகள் ஸ்டிரைக்: கால் டாக்சி, ஆட்டோ சேவைகள் முடக்கம் !

  • solarcar_race

    சூரிய மின்சக்திகளால் இயங்கும் கார்களுக்கான பந்தயம் சிலி நாட்டில் கொண்டாட்டம்!

  • hondurans_americatrump

    ஹோண்டராஸில் இருந்து அமெரிக்கா நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் அகதிகள் !

  • snowfall_kedarnthpics

    கேதார்நாத், பத்ரிநாத்தில் உருவாகியுள்ள பனிப்பொழிவின் புகைப்படங்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்