SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடந்த ஓராண்டில் மாவட்டத்தில் அரங்கேற்றம் 89 கொலை, 122 வழிப்பறி சம்பவங்கள்

2/13/2018 8:50:13 AM

* இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்
* போலீசாருக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

மதுரை, பிப். 13: மதுரை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 89 கொலைகள், 122 வழிப்பறி சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோர்களை இரும்புக்கரம் கொண்டு போலீசார் அடக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதியில் கொலை, கொள்ளை என நாள்தோறும் குறறச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால், பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியும், அச்சமும் நிலவுகிறது. மதுரையில் கடந்த ஓராண்டில் 89 கொலைகள் அரங்கேறியுள்ளன. இதேபோல் கொள்ளைகளும் ஏராளம்.  தூங்கா நகரான மதுரையில் விடிய, விடிய மக்கள் நாடமாட்டம் இருக்கும். ஆனால், தற்போது நடக்கும் வழிப்பறி, திருட்டு, கொள்ளை, கொலை சம்பவங்களை பார்த்து மக்கள் வெளியில் வர அச்சம் அடைந்துள்ளனர்.

தனியாக வரும் பெண்களிடம், வழிப்பறி செய்த கொள்ளையர்கள் தற்போது ஆண்களையும் விட்டுவைப்பது இல்லை. மதுரை அண்ணா நகர் பகுதியில் நடந்து வரும் முதியவர்களை குறிவைத்து கத்தியால் குத்திக் காயத்தை ஏற்படுத்தி நகை, செல்போன், பணம் உள்ளிட்ட பொருட்களை பறிக்கும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. போலீசார் எண்ணிக்கை குறைவாக இருப்பதைக் காரணம் காட்டி ரோந்து பணி முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. இதனால், கொள்ளையர்கள் வலம் வந்து மிகுந்த தைரியத்துடன் சம்பவங்களை செய்து விட்டு தப்புகின்றனர்.

 போலீசார் வருவதற்குள் அவர்கள் அடுத்த எல்லையை தண்டி விடுகின்றனர். இதனால் பறி கொடுத்த நபர்கள் நகை, பணத்தை திரும்ப பெற முடியாத நிலையில் காவல்நிலையத்திற்கு அலைந்த வண்ணம் உள்ளனர். எனவே, கொள்ளை, வழிப்பறி, கொலை சம்பவங்களில் ஈடுபடுவோர்களை போலீசார் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து சமூக ஆர்வலர் முத்து கூறுகையில், ‘‘மதுரை நகர், புறநகர் பகுதியில் ஓராண்டில் 89 கொலைகள் நடந்துள்ளன. நகரில் 52 கொலை முயற்சி, பலாத்காரம் 9, பாலியல் தொல்லை 14, வன்கொடுமை சம்பவம் 75, பெண் கடத்தல் 7, வழிப்பறி 122 உள்ளிட்ட 485 குற்றச்சம்பவங்களால் மதுரை கலங்கி நிற்கிறது. இதுபோல் புறநகரிலும் 534 சம்பவங்கள் நடந்துள்ளன. எனவே, போலீஸ் கமிஷனர் மகேஸ்குமார் அகர்வால், எஸ்பி மணிவண்ணன் ஆகியோர் இணைந்து குற்றச்சம்பவங்களை தடுக்க முன்வர வேண்டும்’’ என்றார்.

போலீசார் கூறுகையில், ‘‘மதுரை மாவட்டத்தில் கடந்த 7 வருடமாக போலீசாரின் எண்ணிக்கை குறைந்த வண்ணம் உள்ளது. புதிய ஆட்கள் நியமனம் இல்லை. சட்டம் ஒழுங்கு, குற்றம், போக்குவரத்து பிரிவுகளில் போலீசார் பற்றாக்குறை நிலவி வருகிறது. போலீஸ் முதல் அதிகாரிகள் வரை தனி பிரிவுகளை தேடி செல்கின்றனர். தொடர்ந்து பற்றாக்குறை இருப்பதால் குற்றங்களை தடுக்க போதுமான போலீசார் இல்லை’’ என்றனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • trans_porattam

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான படுகொலையை கண்டித்து பிணம் போல் படுத்து திருநங்கைகள் நூதன போராட்டம்

  • neru_park_chinnamalai11

    நேரு பூங்கா - சென்ட்ரல் மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா!

  • stalin_dmk11

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் சாலை மறியல்

  • PlasticawarenessLondon

    லண்டன் பூங்காவில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி

  • stalin_arrestkaithu11

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மதுராந்தகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் கைது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்