SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் இடங்கள் 250 ஆக அதிகரிப்பு

2/13/2018 8:49:44 AM

மதுரை, பிப். 13: மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில், இந்தாண்டுக்கான எம்பிபிஎஸ்  மாணவர்களின் சேர்க்கை இடங்கள் 250 ஆக உயர்த்த இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதியுள்ளது. இதற்கான கல்லூரி கட்டமைப்பு பணிகள் தொடங்கப்பட உள்ளது. மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் தற்போது எம்பிபிஎஸ் மாணவர்  சேர்க்கைக்கான இடங்கள் 155 உள்ளன. இந்த எண்ணிக்கையை 250 ஆக உயர்த்த  தமிழக அரசு தீவிர முயற்சி மேற்கொண்டது. இந்திய மருத்துவக் கவுன்சில், ஒவ்வொரு முறையும் ஆய்வு என்ற பெயரில், ஏதாவது காரணங்களை கூறி தட்டிக்கழித்தது.

இந்நிலையில்,  தமிழகத்தில் உள்ள 4 மருத்துவக்கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான இடங்களை அதிகரிக்க இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. இதற்காக மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. இதன்படி, மதுரை மருத்துவக்கல்லூரியில் 155 ஆக  இருந்த மாணவர் சேர்க்கை இடங்கள் 250 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கல்லூரி கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 125 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதே போல் ெநல்லை, கோவை மருத்துவக்கல்லூரிகளில் 150 இடங்களை 250 ஆகவும், கன்னியாகுமரி  மருத்துவக்கல்லூரியில் 100 ஆக இருந்த மாணவர் சேர்க்கையை 150 ஆகவும்  உயர்த்திக்கொள்ள அனுமதி வழங்கி, அதற்கான நிதியையும் ஒதுக்கியுள்ளது.   

இது குறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் மருதுபாண்டியன் கூறுகையில், ‘மதுரை மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கையை 250 ஆக உயர்த்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்திய மருத்துவக் கவுன்சில்  எதிர்பார்க்கும் கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும்.  பேராசிரியர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை நியமனம் செய்யப்படும். வகுப்பறைகள், பரிசோதனைக்  கூடம், நூலகம், மாணவர் மற்றும் மாணவியர் விடுதிகளின் அடிப்படை வசதிகள்,  பேராசிரியர் அறைகள் உள்ளிட்ட அனைத்து கட்டமைப்பு வசதிகளும்  மேம்படுத்தப்படும்’ என்றார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • birdfestivalcanada

    கனடாவில் வான்கூவர் நகரில் நடைபெற்ற பறவை திருவிழாவில் பறவைகள் போல உடையணிந்து தன்னார்வலர்கள் பங்கேற்பு

  • militaryparangimalai

    ராணுவ வாகனங்கள், ஆயுதங்கள், யானை தந்தங்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் பரங்கிமலை ராணுவ பயிற்சி மையம்

  • guwahatidiadhani

    குவஹாத்தியில் தியோதானி திருவிழா கொண்டாட்டம் : விலங்குகளை பலி கொடுத்து பக்தர்கள் வழிபாடு

  • koreanwarmeet

    கொரிய போரின் போது குடும்பங்களை பிரிந்து சென்ற மக்கள் 65 ஆண்டுகளுக்கு பிறகு கண்ணீர்மல்க சந்திப்பு

  • srilankakitefestival

    இலங்கையில் பட்டம் திருவிழா கோலாகலம் : பல்லாயிரக்கணக்கானோர் வண்ணமயமான பட்டங்களுடன் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்