SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடந்தாண்டு சென்னைக்கு 235வது இடம் தூய்மை நகரங்கள் பட்டியலில் முன்னணி இடத்தை பிடிக்க மாநகராட்சி தீவிரம்

2/12/2018 12:54:45 PM

சென்னை, பிப். 12: தூய்மை நகரங்கள் பட்டியலில் முன்னணி இடத்தை பிடிக்க விழிப்புணர்வு பிரசாரத்தை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சென்னைவாசிகள் தங்களது கருத்தை தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் இந்திய தர கவுன்சில் ஆய்வு நடத்தி நாடு முழுவதும் உள்ள தூய்மை நகரங்களின் பட்டியலை வெளியிடும். அதன்படி, கடந்தாண்டு இந்திய தர கவுன்சில் வெளியிட்ட தூய்மை நகரங்களின் பட்டியலில் சென்னை 235வது இடத்தை பிடித்திருந்தது. இது, மாநகராட்சியின் நடவடிக்ைக மீது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியது. இந்நிலையில், இந்த ஆண்டு தூய்மை நகரங்களை தர வரிசைப்படுத்துவதற்கு கணக்கெடுக்கும் பணி கடந்த 4ம் தேதி முதல் மார்ச் 10ம் தேதி வரை நடந்து வருகிறது. இந்தாண்டு தூய்மை நகரங்கள் பட்டியலில் 4,041 நகரங்கள் உள்ளன. இதில், ஒரு லட்சத்திற்கு அதிகமான மக்கள் தொகையை கொண்ட 500 பெரிய நகரங்கள் மற்றும் மாநிலங்களின் தலைநகரங்கள் இடம்பெற்றுள்ளன.

இதில், நகர ஆவணங்களுக்கு 1400, நேரடி கள ஆய்வுக்கு 1200, பொதுமக்களின் பங்களிப்புக்கு 1,400 என மொத்தம் 4000 மதிப்பெண்கள் அளிக்கப்படுகின்றன. பொதுமக்கள் பங்களிப்பில் தூய்மை குறித்து மக்கள் தங்களது கருத்தை கட்டணமில்லா தொலைபேசி எண் 1969 மற்றும் 1800-111-969 தூய்மை இந்தியா குறித்து கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்கலாம்.இதுமட்டுமின்றி, www.swachhsurvekshan2018.org/citizenfeedback என்ற இணையதளத்திலும் swachhatta app என்ற மொபைல் ஆப்பில் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றை தொடர்பு கொள்பவர்களிடம் தூய்மை தொடர்பான 6 வகையான கேள்விகள் கேட்கப்படும். இவற்றிற்கு பொதுமக்கள் அளிக்கும் கருத்தின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும். இதுவரை, சென்னையை சேர்ந்த 5000க்கும் மேற்பட்டோர் இந்த கேள்விகளுக்கு பதிலளித்துள்ளனர். இந்நிலையில், தூய்மை இந்தியா மதிப்பீடு 2018ல் சென்னை மாநகராட்சி கடந்த ஆண்டை போல் அல்லாமல் முன்னணி இடத்தை ெபற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, தூய்மை இந்தியா மதிப்பீடு 2018ஐ விளக்கி ஆட்டோ, பஸ், மாநகராட்சி வாகனங்கள் உள்ளிட்டவற்றில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளன. இது தவிர, மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பேனர்கள் பொதுமக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.

இதுதவிர, தூய்மை பணிகளில் 19 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்திய தர கவுன்சில் அதிகாரிகள் இம்மாத இறுதிக்குள் சென்னை வந்து கள ஆய்வை மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா முழுவதும் தூய்மை நகரங்களை தர வரிசைப்படுத்துவதற்கு கணக்கெடுக்கும் பணி மார்ச் 10ம் தேதி முடிவடைகிறது. அடுத்த ஒரு சில தினங்களில் சென்னை எந்த இடத்தை பிடிக்கும் என்று தெரியவரும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-08-2018

    16-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-08-2018

    15-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்