SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வீடுகட்ட வங்கிக்கடன் வாங்கித்தருவதாக ₹2 லட்சம் மோசடி செய்த பெண் கைது

2/12/2018 12:54:35 PM

சென்னை, பிப். 12: சென்னை புழல், திருப்பூர்குமரன் தெருவில் வாடகை வீட்டில் வசிப்பவர் செல்வி (எ) கலைச்செல்வி (40). இவர், அக்கம் பக்கத்தினரிடம் நெருங்கி பழகியுள்ளார். அப்போது, செங்குன்றத்தில் உள்ள தனியார் வங்கி அதிகாரிகளுடன் எனக்கு நல்ல பழக்கம் உள்ளது. அவர்களிடம் கூறி,  வீடு கட்டுவதற்கு  ₹2 முதல் 5 லட்சம் வரை நிதியுதவி வாங்கி தருகிறேன். அதற்கு கமிஷனாக ₹5 ஆயிரம் தரவேண்டும் என ஆசைவார்த்தை கூறியுள்ளார்.

 இதை நம்பிய 20க்கும் மேற்பட்ட பெண்கள், தலா ₹5 ஆயிரம் முதல் ₹18 ஆயிரம் வரை கலைச்செல்வியிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்தவகையில்  ₹2 லட்சம் வரை அவர் வாங்கியுள்ளார். மேலும், ஒரு சில பெண்கள் தங்களது கணவனுக்கு தெரியாமல் நகை கொடுத்துள்ளனர். பணம் வாங்கி 2 மாதங்கள் ஆகியும் வாக்குறுதி அளித்தபடி வங்கியில் இருந்து பணத்தை வாங்கி சம்பந்தப்பட்டவர்களுக்கு கலை செல்வி கொடுக்கவில்லை. இதனால், பாதிக்கப்பட்ட பெண்கள், பணத்தை திருப்பி கேட்டபோது பணத்தை திருப்பி தருவதாக நாட்களை கடத்தி உள்ளார். மேலும், பணம் கேட்டவர்களிடம், தனக்கு கூலிப்படையை சேர்ந்தவர்களை தெரியும். அவர்களை வைத்து தீர்த்து கட்டிவிடுவேன் என்று கொலை மிரட்டல்விடுத்துள்ளார்.இதுகுறித்து புழல் காவல்நிலையத்தில் கலைச்செல்வி மீது பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து கலைச்செல்வியை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
 

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • aalangatty_kanamalai11

    டெல்லியில் பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை காரணமாக போக்குவரத்து முடக்கம்

  • northensnow

    பனிப்பொழிவால் உறைந்த வட மாநிலங்கள் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • baloon_worstand

    ஆந்திராவின் அரக்கு பகுதியில் சர்வதேச பலூன் திருவிழா : பிரமாண்ட வண்ண பலூன்களால் பார்வையாளர்கள் பரவசம்

  • redmoon_lunar12

    சிவப்பு நிறத்தில் காட்சியளித்த நிலவு! : வானில் தோன்றிய முழு சந்திர கிரகணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்