SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முறையான பராமரிப்பு, உதிரி பாகங்கள் இல்லாததால் குப்பைக்கு சென்ற 249 மாநகர பஸ்கள்

2/12/2018 12:54:21 PM

சென்னை, பிப்.12: முறையான பராமரிப்பு இல்லாமல் சென்னையில் 249 மாநகர பஸ்கள் டெப்போக்களின் பின்புறம் ஒன்றன் மீது ஒன்றாக போட்டுவைக்கப்பட்டுள்ளது. இதனால் பல டெப்ேபாக்களில் அதிக வருவாய், டிரைவர்கள் இருந்தும் பஸ்கள் இல்லாத காரணத்தால் பணியில்லாமல் வீடு திரும்பும் அவலம் ஏற்பட்டுள்ளது.தமிழக அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகத்தில் சமீபகாலமாக முறைகேடு அதிகரித்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதுபோன்ற காரணங்களால் அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் குறைந்து போக்குவரத்துக் கழகங்கள் கடும் நிதிநெருக்கடியில் உள்ளன. ஆனால் அரசோ, நிர்வாக சீர்கேடுகளை சரி செய்யாமல் பஸ் கட்டணத்தை உயர்த்தி பொதுமக்களை துன்பத்துக்கு ஆளாக்கியது.

இந்நிலையில், பழுதடைந்த பஸ்களுக்கு அதிகாரிகள் உதிரி பாகங்கள் வாங்கி கொடுக்காத காரணத்தால் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான அரசு பஸ்கள் ஓரங்கட்டப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 249 பஸ்கள் பல டெப்போக்களின் பின்னால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தகவல் ெவளியாகி உள்ளது.

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் (எம்டிசி) மொத்தம் 3,694 வழித்தடங்களில் 3688 பஸ்கள் இயக்கப்பட்டன. தொழில்நுட்ப ஊழியர்கள் போதிய அளவு இல்லாதது, உதிரி பாகங்கள் இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் இந்த பஸ்களை முறையாக பராமரிக்கவில்லை. இதனால் பெரும்பாலான பஸ்கள் அடிக்கடி நடுவழியில் பழுதாகி விடுகிறது. 80 சதவீதம் பஸ்கள் 10 ஆண்டுகளுக்கு மேல் இயக்கப்படுவதால்

காலாவதியாகிவிட்டன. நிதி நெருக்கடியை காரணம் காட்டி அந்த பஸ்களை மாற்றாமல் இருந்து வருகின்றனர். இதனால் ஒவ்வொரு பஸ்களாக முற்றிலும் பழுதாகி வருகின்றன. கடந்த 3 மாததத்தில் மட்டும் 50க்கும் மேற்பட்ட பஸ்கள் முற்றிலும் பழுதாகி ஓரங்கட்டப்பட்டு விட்டதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் தற்போது 3,439 பஸ்களே சென்னையில் இயக்கப்படுகின்றன. மொத்தம் 249 பஸ்கள், இயக்குவதற்கு லாயக்கு இல்லாமல் முற்றிலும் பழுதாகி பணிமனையில் ஓரங்கட்டி வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து ஊழியர்கள் கூறியதாவது: சென்னையில் இயக்கப்படும் பெரும்பாலான பஸ்கள் காலாவதியானவை. இவற்றை அவ்வப்போது முறையாக பராமரித்தால் மட்டுமே இயக்க முடியும். தேவைக்கேற்ப உதிரி பாகங்கள் புதிதாக மாற்ற வேண்டும். ஆனால் பல டெப்போக்களில் உதிரி பாகங்கள் சரிவர வாங்கி கொடுப்பதில்லை. இதனால் பழைய உதரிபாகங்களையே மீண்டும், மீண்டும் சரிசெய்து பொருத்துகின்றனர். இதனால் அந்த பஸ்களின் ஆயுட்காலம் விரைவில் முடிந்து விடுகிறது. பீக்அவர்சில் போதிய பஸ்கள் இல்லாமல் பொதுமக்கள், மாணவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். ஆனால் அதிகாரிகளின் அலட்சியத்தால் பஸ்கள் இருந்தும் அதை இயக்க முடியாமல் உள்ளது என்றனர்.

பஸ் இல்லாமல் திரும்பிச் செல்லும் டிரைவர்கள்: எம்டிசியில் 10,137 கண்டக்டர்கள், 9680 டிரைவர்கள் பணிபுரிகின்றனர். இந்த நிலையில், திடீரென 249 பஸ்கள் பழுதாகி ஓரங்கட்டப்பட்டதால் பணியில் இருக்கும் டிரைவர்களுக்கு ஓட்ட பஸ்கள் கிடைப்பதில்லை. இதனால் தினமும் பல டெப்போக்களில் டிரைவர், கண்டக்டர்கள் பணிக்கு சென்று பஸ் இல்லாமல் திரும்புகின்றனர். நிர்வாகத்தின் இந்த தவறுக்கு சில டெப்போக்களில் ஊழியர்களுக்கு ஆப்சென்ட் போடுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 16-02-2019

  16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • BrightBrussels

  ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

 • francelemon

  பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

 • TitanicReplicaChina

  முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு

 • train18modi

  டெல்லியில் ட்ரெயின் 18 'வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்'- ஐ கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்