SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாஜ பெண் பிரமுகர் வீட்டில் பட்டப்பகலில் பயங்கரம்: சிலிண்டர் வெடித்து தீவிபத்து யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்ப்பு

1/19/2018 10:46:34 AM

சென்னை, ஜன.19: பாஜ பெண் பிரமுகர் வீட்டில் சிலிண்டரில் எரிவாயு கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சென்னை அசோக் நகர் அருகே  ஜாபர்கான் பேட்டை பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் ஹேமா பிந்து (48). தமிழக பாஜ தென் சென்னை மாவட்ட மகளிர் அணி செயலாளராக உள்ளார். இரண்டு அடுக்கு கொண்ட வீட்டில் கீழ் தளத்தில் மளிகை கடை, சில்வர் பாத்திரங்களுக்கு பாலீஷ் பட்டறையும் உள்ளது.

முதல் தளத்தில் ஹேமா பிந்து வசித்து வருகிறார். மாடியில் இரண்டு வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளார். வீடுகளில் ஹேமா பிந்து உள்பட யாரும் இல்லை.
இந்நிலையில், நேற்று மதியம் திடீரென ஹேமா பிந்து வீட்டில் பயங்கர சத்தத்துடன் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென வீடு முழுவதும் தீ பரவியது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி கிண்டி, அசோக் நகர் பகுதியில் இருந்து 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.

முதல் மாடியில் இருந்து வெடிக்கும் நிலையில் இருந்த 2 எரிவாயு சிலிண்டர்களை பத்திரமாக வீரர்கள் மீட்டனர். கட்டிடத்தின் மேல் தளத்திற்கு தீ பரவாமல் தண்ணீர் பீய்ச்சி அடித்து தடுக்கப்பட்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இதுகுறித்து எம்ஜிஆர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், எரிவாயு சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-10-2018

    22-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-10-2018

    21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • dussehraa_11

    நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்