SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அனகாபுத்தூரில் நீர்த்தேக்க பகுதியில் ஆக்கிரமிப்பு: 200 குடும்பங்களை அகற்ற வேண்டும்

1/19/2018 10:46:06 AM

சென்னை, ஜன. 19: அனகாபுத்தூர் காயிதே மில்லத் நகரில் சுமார் 200 குடும்பத்தினர் சுமார் 50 ஆண்டுகளாக வசித்து வருகிறார்கள். இவர்கள், குடியிருக்கும் இடம் நீர் தேக்கப் பகுதி என்று வருவாய்துறை ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த இடத்திற்கு பட்டா வழங்கக்கோரி குடியிருப்பவர்கள் வருவாய் துறையினருக்கு தொடர்ந்து மனுக்களை அனுப்பி வந்தனர். இந்நிலையில், இந்த குடியிருப்புகள் இருக்கும் இடம் நீர்த்தேக்க குளப்பகுதி என்பதால் 21 நாட்களுக்குள் காலி செய்ய வேண்டும் என்று காயிதே மில்லத் நகரைச் சேர்ந்த சிலருக்கு பொதுப்பணித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து, அக்பர் ஷரீப் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் வேணுகோபால், வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அளித்த உத்தரவு வருமாறு: நீர் தேக்கப் பகுதிகள், நீர்பிடிப்பு பகுதிகள் போன்ற இடங்களில் ஆக்கிரமிப்புகள் இருக்கக் கூடாது என்றும் அந்த ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஆக்கிரமிப்பு இடங்களை காலி செய்யுமாறு தமிழக பொதுப்பணித்துறை நோட்டீஸ் அனுப்பியது.

ஆனால், மனுதாரரும் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ளவர்களும் அங்கிருந்து காலி செய்யவில்லை. இதுபோன்ற ஆக்கிரமிப்புகளால்தான் 2015ல் கடுமையான வெள்ளப் பெருக்கில் ஏராளமான இழப்புகள் ஏற்பட்டது. அதன் பிறகுதான் நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்தவர்களை அகற்றும் பணியில் அரசு இறங்கியது.
எனவே, தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று கோரி கொடுக்கப்பட்ட மனுவால் எந்த பயனும் மனுதாரருக்கு ஏற்படப்போவதில்லை. சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 30 நாட்களுக்குள் அகற்ற வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • saaambal_cat11

    சாம்பல் பாதி, கறுப்பு பாதி... இருவேறு முகங்களை கொண்ட உலகின் வினோத பூனை

  • cars_seena_hunan

    கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய 11,000 கார்கள்! : இரவை முழுவதும் சாலையில் கழித்து மக்கள் அவதி

  • matruthiranadigal1

    மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் பூமியை காப்பது குறித்த விழிப்புணர்வின் ஒத்திகை நிகழ்ச்சி

  • MasiFestival

    திருச்செந்தூர் மாசி திருவிழா : சுவாமி தங்க முத்துகிடா வாகனத்தில் திருவீதி உலா

  • 23-02-2018

    23-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X