SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாடம் நடத்த ஆசிரியர் இல்லாததை கண்டித்து தனியார் பள்ளியை மாணவர்கள், பெற்றோர் முற்றுகை: கொருக்குப்பேட்டையில் பரபரப்பு

1/19/2018 10:45:57 AM

சென்னை, ஜன. 19: கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ. நகரில் தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளி உள்ளது. இங்கு, எல்கேஜி முதல் பிளஸ் 2 வரை 1500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில், கடந்த 6 மாதத்துக்கு மேலாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு சரிவர சம்பளம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் பல ஆசிரியர்கள் வேலையை ராஜினாமா செய்துவிட்டு சென்று விட்டனர். எனவே, மாணவர்களுக்கு சரிவர பாடம் நடத்தப்படுவதில்லை என தெரிகிறது.

இதை கண்டித்து, கடந்த 4 மாதத்துக்கு முன் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆர்.கே.நகர் போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தி, ஆசிரியர்களுக்கு உரிய சம்பளம் வழங்கவேண்டும், கூடுதல் ஆசிரியர்களை நியமிக்கவேண்டும் என பள்ளி நிர்வாகத்திடம் கூறினர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பெற்றோர் குற்றம் சாட்டினர். தற்போது மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத உள்ள நிலையில், சரிவர பயிற்சி அளிக்காததால் அச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று காலை மாணவர்கள், பெற்றோர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பள்ளியை திடீர் என முற்றுகையிட்டனர். மேலும் கத்திவாக்கம் நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் வண்ணாரப்பேட்டை போலீஸ் உதவி கமிஷனர் சிராஜூதீன் மற்றும் ஆர்.கே.நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இந்த பிரச்னை தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • trans_porattam

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான படுகொலையை கண்டித்து பிணம் போல் படுத்து திருநங்கைகள் நூதன போராட்டம்

  • neru_park_chinnamalai11

    நேரு பூங்கா - சென்ட்ரல் மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா!

  • stalin_dmk11

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் சாலை மறியல்

  • PlasticawarenessLondon

    லண்டன் பூங்காவில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி

  • stalin_arrestkaithu11

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மதுராந்தகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் கைது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்