SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோவளம் துறைமுகத்திற்கு எதிர்ப்பு 20 கிராம மக்கள் உண்ணாவிரதம் தென்தாமரைகுளத்தில் 20ம் தேதி அடுத்தகட்ட போராட்டம்

1/13/2018 12:18:21 PM

கன்னியாகுமரி, ஜன. 13:  கோவளத்தில்  துறைமுகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 20 கிராம மக்கள் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
 குமரி  மாவட்டம் இனயத்தில் சர்வதேச சரக்கு பெட்டக மாற்று முனையம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. ஆனால் கடற்கரை கிராமங்களை சேர்ந்த மக்களின்  எதிர்ப்பு, தொடர் போராட்டங்கள் காரணமாக, கன்னியாகுமரி அருகே  கோவளத்துக்கும், கீழமணக்குடிக்கும் இடைப்பட்ட பகுதியில் துறைமுகம்  அமைப்பதற்கான இடம் ேதர்வு செய்யப்பட்டது. இங்கும்  துறைமுகத்துக்கு ஆதரவும்,  எதிர்ப்பும் நிலவி வருகிறது.

இந்த நிலையில் துறைமுகத்துக்கு  எதிர்ப்பு தெரிவித்து கோவளம் கடற்கரை விளையாட்டு மைதானத்தில் நேற்று காலை  பொதுமக்கள்  உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். இதில் கன்னியாகுமரி,  சின்னமுட்டம், சிலுவைநகர், வாவத்துறை, தென்தாமரைக்குளம், கோவில்விளை,  முகிலன்குடியிருப்பு, சாமிதோப்பு, கின்னிக்கண்ணன்விளை உள்பட சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர்  என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்  துறைமுகத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலான வாசகங்கள் அடங்கிய  பேனர்களை கையில் வைத்திருந்தனர். போராட்டக்காரர்கள் கூறும்போது,  துறைமுகம் அமைந்தால் 10 கி.மீ. தூரத்துக்கு மக்கள் இடம்பெயர வேண்டி வரும். கடல் ஆமைகள் முட்டையிடும் மணல் திட்டுக்கள், பறவைகள் கூடுகட்டி வாழும்  சதுப்பு நிலங்கள் அடங்கிய இப்பகுதியில் இயற்கை வளங்கள் அழியும்.

துறைமுகத்துக்கு  2 லட்சம் மெட்ரிக் டன் அளவில் கற்கள் தேவைப்படும். இதை மருந்துவாழ்  மலையில் இருந்துதான் எடுப்பர். அப்போது அந்த மலைவளம் அழியும். மேலும்  துறைமுகத்துக்கு தேவைப்படும் தண்ணீரால் குமரியில் விவசாயமும் அழியும்.  பிற்காலத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விவேகானந்தர் பாறைக்கும்  பாதிப்பு ஏற்படும். இதனால் துறைமுக திட்டத்தை எதிர்க்கிறோம் என்றனர்.

போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர்கள் பிரபா பெர்னாண்டோ, ஆர்.எஸ். பார்த்தசாரதி, திமுக மாநில மீனவரணி செயலாளர் பெர்னாடு, ஐக்கிய ஜனதாதள வட்டார தலைவர் தியாகராஜன், நாம் தமிழர் கட்சி ஒன்றிய செயலாளர் தமிழ்செல்வன், பங்குத்தந்தையர் கலந்து கொண்டனர். மேலும் அடுத்த போராட்டம் வரும் 20ம் தேதி தென்தாமரைகுளத்தில் நடைபெறும் எனவும் போராட்டக்குழுவினர் தெரிவித்தனர்.

மெரினா கடற்கரை போல் உருவாகும் கூட்டத்தில் இன்டாக் கன்வீனர் லால்மோகன் பேசியது: கன்னியாகுமரியில் சரக்கு பெட்டக துறைமுகம் அமைந்தால் துறைமுகத்தில் வடக்கு  பக்கத்தில் மண் குவியலும், தெற்கு பக்கத்தில் மண்ணரிப்பும் ஏற்படும் என்று  துறைமுக ஆலோசனை நிறுவனம் கூறுகிறது. அப்படி ஏற்பட்டால்  கோவளம், கீழமணக்குடி பகுதிகளில் மணல் குவியல் ஏற்பட்டு சென்னை மெரினா கடற்கரை போல் உருவாகும். மேலும் துறைமுக திட்டப்பகுதியில் இருந்து 2 கி.மீ தூரத்தில் உள்ள  மணக்குடி பொழிமுகம் முற்றிலும் அழிந்துவிடும்.

அதேபோல் துறைமுக  திட்டப்பகுதியில் இருந்து 2.5 கி.மீ தூரத்திற்கு கடல் நீர் உள்வாங்குவதால்  மழைக்காலத்தில் சுசீந்திரம், கோட்டார், மீனாட்சிபுரம், வடிவீஸ்வரம் போன்ற  தாழ்வான பகுதிகளை பாதுகாக்கும் வடக்கு தாமரைகுளம் சதுப்பு நிலம் அழிந்து  சுசீந்திரம், நாகர்கோவில் பகுதிகளில் ஊருக்குள் தண்ணீர் புகும் அபாயம்  ஏற்படும்.

துறைமுகம் கடலின் உள் அமைந்தாலும்  துறைமுகத்திற்கு வேண்டிய தண்ணீர், குடிநீர், போக்குவரத்து பாதை,  தொழிற்சாலைகள், துறைமுக பணியாளர்களின் வீடுகள், விடுதிகள் போன்றவை  கடற்கரையில் தான் அமையும். அப்படி அமைந்தால் கடற்கரையின் மேலாண்மை அழிந்துவிடும். மீன் பிடிக்கும் தொழில் கடுமையாக பாதிக்கும். துறைமுக பாதுகாப்பு மத்திய பாதுகாப்பு படையிடம் ஒப்படைக்கப்படும். இதனால்  பொதுமக்கள் இப்பகுதியில் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • WorldEconomicConference

  ஸ்விட்சர்லாந்தில் உலகப் பொருளாதார மாநாடு: பிரதமர் மோடி, நடிகர் ஷாரூக்கான் பங்கேற்பு

 • SWITZERLANDHeavySnow

  சுவிட்சர்லாந்து நாட்டில் வரலாறு காணாத பனிப்பொழிவு: சுற்றுலாப் பயணிகள் வருகை பாதிப்பு

 • CapeTownWaterCrisis

  வரலாறு காணாத வறட்சியால் கேப் டவுனில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு: பொதுமக்கள் பரிதவிப்பு

 • NCCcampnirmala

  டெல்லியில் என்சிசி மாணவ-மாணவிகள் முகாம் : நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார்

 • 23-01-2018

  23-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்