SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குளச்சல் மீனவர்கள் வலையில் சிக்கிய அழுகிய ஆண் சடலம் ஓகி புயலில் இறந்தவரா என விசாரணை

1/13/2018 12:18:16 PM

குளச்சல், ஜன. 13: குளச்சல் மீனவர்களின் வலையில் அழுகிய நிலையில் ஆண் சடலம் சிக்கியது. குளச்சலை  சேர்ந்த 11 மீனவர்கள் கொல்லம் துறைமுகத்தில் இருந்து விசைப்படகில்  மீன்பிடிக்ககடலுக்கு சென்றனர். அவர்கள் நேற்று அதிகாலை குளச்சலில் இருந்து  34 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, திடீரென அவர்களது வலையில்  கனமான பொருள் ஒன்று சிக்கியது.

பெரிய மீன் சிக்கியிருக்கலாம்  என மகிழ்ந்த மீனவர்கள் வலையை இழுத்தனர். அப்போது அதில் அழுகிய  நிலையில் ஆண் சடலம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து உடலை  குளச்சல் கடற்கரைக்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து குளச்சல் மரைன்  போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ஜாண்  கிங்ஸ்லி மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.  

ேமலும் சடலத்தை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது ஓகி புயலில் சிக்கி  உயிரிழந்த மீனவரின் உடலாக இருக்கலாம் என கருதப்படுகிறது. உடல் மிகவும் அழுகிய நிலையில் காணப்படுவதால் அடையாளம் காண முடியவில்லை. எனவே டிஎன்ஏ  பரிசோதனை நடத்தி உடல் அடையாளம் காணப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • WorldEconomicConference

    ஸ்விட்சர்லாந்தில் உலகப் பொருளாதார மாநாடு: பிரதமர் மோடி, நடிகர் ஷாரூக்கான் பங்கேற்பு

  • SWITZERLANDHeavySnow

    சுவிட்சர்லாந்து நாட்டில் வரலாறு காணாத பனிப்பொழிவு: சுற்றுலாப் பயணிகள் வருகை பாதிப்பு

  • CapeTownWaterCrisis

    வரலாறு காணாத வறட்சியால் கேப் டவுனில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு: பொதுமக்கள் பரிதவிப்பு

  • NCCcampnirmala

    டெல்லியில் என்சிசி மாணவ-மாணவிகள் முகாம் : நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார்

  • 23-01-2018

    23-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்