SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பொங்கல் விடுமுறை: பஸ், ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம்; முன்பதிவு மையம் இயங்கியது

1/13/2018 11:04:55 AM

திருச்சி, ஜன.13:  திருச்சியில் 8 நாட்களுக்கு பின் நேற்று அரசு பஸ்கள் வழக்கம் போல் இயங்கியதால் பஸ் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலை மோதியது.
ஊதிய உயர்வு கேட்டு கடந்த 8 நாட்களாக நடைபெற்று வந்த அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் போராட்டம் நேற்றுமுன்தினம் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து மத்திய, சத்திரம் பஸ்நிலையங்களில் நேற்றுமுன்தினம் இரவு பயணிகள் கூட்டம் அதிகளவில் இருந்தது. நேற்று அதிகாலை 5மணி முதல் பஸ் நிலையங்களில் அரசு பஸ்கள் வழக்கம் போல் ஓடின. மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, கன்னியாகுமரி, திருப்பூர், கோவை ஆகிய தொலைதூர மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

அனைத்து பஸ்களிலும் வழக்கம்போல் கூட்டம் இருந்தது. பள்ளிகளுக்கு நேற்று முதல் விடுமுறை விடப்பட்டது. பிற அரசு அலுவலங்களுக்கு இன்று முதல் விடுமுறை என்பதால் நேற்றிரவு ஊருக்கு செல்ல துவங்கினர். இதனால் மத்திய பஸ் நிலையம் மக்கள் கூட்டத்தால் பரபரப்பானது. இதனால் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.  மேலும் பயணிகள் கூட்ட நெரிசலை சமாளிக்க மன்னார்புரம், சோனா மீனா தியேட்டர் அருகே ஆகிய இடங்களில் 3 தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் மன்னார்புரத்தில் இருந்து மதுரை, புதுக்கோட்டை மார்க்கமாகவும், சோனாமீனா தியேட்டர் அருகில் இருந்து தஞ்சை மார்க்கமாகவும் பஸ்கள் நேற்று மாலை 5 மணி முதல் இயக்கப்பட்டு வருகின்றன. மாநகரில் முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் காவல் கட்டுப்பாட்டு அறை 100, மாநகர போலீஸ் கமிஷனரின் வாட்ஸ்அப் எண் 96262-73399 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. அதேபோல் திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்லக்கூடிய ரயில்களில் கூட்டம் அலை மோதியது. எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவு இருக்கைகள் அனைத்தும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பே ஹவுஸ்புல் ஆனதால் அனைத்து ரயில்களிலும் முன்பதிவில்லா பெட்டிகளில் கூட்டம் அதிகளவில் இருந்தது.


திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-01-2018

    21-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • Hungarystudentsstruggle

    ஹங்கேரியில் கல்வி தரத்தை உயர்த்த கோரி ஆயிரக்கணக்கணக்கான மாணவர்கள் போராட்டம்

  • colambiaparaglidingworldcup

    கொலம்பியாவில் உலகக் கோப்பை பாராகிளைடிங் போட்டி: பல்வேறு பகுதியிலிருந்து வீரர்கள் உற்சாகமாக பங்கேற்பு

  • turkey_dust_storm

    துருக்கி, சிரியா ஆகிய நாடுகளில் வீசிய புழுதிப் புயல்: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • republic_vilaaa

    குடியரசு தின விழா : வண்ணமயமான ஒளியில் மின்னும் ராஷ்திரபதி பவன்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்