SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காந்தி மார்க்கெட்டில் காய்கறி, பழங்கள், பூக்கள் விலை கடும் உயர்வு

1/13/2018 11:04:37 AM

திருச்சி, ஜன. 13:  பொங்கல் பண்டிகையொட்டிகைக்கு காந்திமார்க்கெட்டில் கூட்டம் அலைமோதியது. காய்கறி, பழம், பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. மறுநாள் (15ம் தேதி) மாட்டுப்பொங்கல், வருகிற 16ம்தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கல் அன்று பெண்கள் வீடுகள் அதிகாலையில் கோலமிட்டு சூரிய உதயத்திற்கு முன் பொங்கல் வைத்து வழிபடுவார்கள். பொங்கல் பண்டிகைக்கு கரும்பு, வாழைப்பழம், பூக்கள், இலை மற்றும் காய்கறிகள் போன்ற பொருட்களை இரண்டு நாளைக்கு முன்பே சந்தை மற்றும் கடைகளில் சென்று வாங்கி வருவார்கள். பொங்கலுக்கு தேவையான பொருட்கள் வாங்க நேற்று திருச்சி காந்தி மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலை மோதியது.

மார்க்கெட்டில் வழக்கத்தை விட பொங்கலையொட்டி பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. ஒரு கிலோ முந்திரி ரூ.840க்கும், திராட்சை ரூ.240க்கும், உருண்டை வெல்லம் ரூ.58, அச்சு வெல்லம் ரூ.65, பச்சரிசி ரூ.32 என விற்கப்படுகிறது. இதேபோல் ரூ.700க்கு விற்ற பூவன் தார் ரூ.950க்கும், ரூ.450க்கு விற்ற ரஸ்தாளி தார் ரூ.700க்கும், ரூ.250க்கு விற்ற மொந்தன் தார் ரூ.450க்கும், மஞ்சள்கொத்து ரூ.30 என விற்கப்ப டுகிறது.  கடந்தாண்டு 10 கரும்பு கொண்ட ஒரு கட்டு ரூ.400க்கு விற்கப்பட்டது. தற்போது ரூ.300க்கு விற்பனை ஆகிறது. ரூ.60க்கு விற்ற பொங்கல் பானை ரூ.80க்கும், ரூ.70க்கு விற்ற அடுப்பு ரூ.80க்கும் விற்பனையானது.

பூக்கள் விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.500க்கு விற்ற சாதிப்பூ 1,000க்கும், ரூ.600க்கு விற்ற மல்லிகை 1,000க்கும், ரூ.60க்கு விற்ற சம்பங்கி ரூ.120க்கும், ரூ.700க்கு விற்ற முல்லை ரூ.1,500க்கும் ரூ.300க்கு விற்ற ரூ.800க்கும் விற்கப்படுகிறது. காய்கறி வகைகளில், ரூ.50க்கு விற்ற ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.60, ரூ.25க்கு விற்ற அவரைக் காய் ரூ.40, ரூ20க்கு விற்ற பீன்ஸ் ரூ.30, ரூ.50க்கு விற்ற கேரட் ரூ.60, ரூ. 40க்கு விற்ற மொச்சை ரூ.70 மற்றும் ரூ.100க்கு விற்ற கட்டு முருங்கை ரூ.140 ஆகிய விலைகளில் விற்பனை செய்யப் பட்டு வருகிறது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-04-2018

    இன்றைய சிறப்பு படங்கள்

  • ShangaiConstrutionBank

    ஊழியர்கள் இல்லை...ரோபோக்களை கொண்டு தானாக இயங்கும் வங்கி: சீனாவில் தொடக்கம்

  • YemenAirstrikeSaudi

    ஏமனில் திருமண வீட்டில் சவுதிக் கூட்டுப்படைகள் தாக்குதல்: அப்பாவி பொதுமக்கள் 20 பேர் பலி

  • CherobylNuclearPowerplant

    32 ஆண்டுகளுக்கு முன் பேரழிவை உண்டாக்கிய செர்னோபில் அணுமின் நிலையத்தின் தற்போதயை நிலை: புகைப்படங்கள் வெளியீடு

  • ImmanueltrumpMeet

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சந்திப்பு: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்