SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தூர்வாரியும் துயரம் தீரவில்லை: கழிவுநீரால் கலங்கும் திருமங்கலம் மக்கள்

1/13/2018 10:25:37 AM

திருமங்கலம், ஜன.13: பல லட்ச ரூபாய் செலவில் தூர்வாரப்பட்ட திருமங்கலம் வடகரை கால்வாயில் மீண்டும் கழிவுநீர் கலப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திருமங்கலம் நகரின் வழியாக முக்கிய ஆறான குண்டாறு செல்கிறது. உசிலம்பட்டி அருகே உள்ள தொட்டபநாயக்கனூரில் துவங்கி திருமங்கலம் வழியாகச் சென்று ராமநாதபுரம் மாவட்ட கமுதி அருகே கடலில் கலக்கிறது. இந்த ஆற்றில் திருமங்கலம் நகரில் பிரிந்து செல்லும் வடகரை கால்வாயும் ஒன்றாகும். திருமங்கலம் நகரின் கழிவுநீர் அனைத்தும் இந்த கால்வாயில் கலக்கிறது.

நகரின் கழிவுநீர் அனைத்தும் இந்த கால்வாயில் சென்று கலப்பதால் வடகரை கால்வாய் முற்றிலும் பொழிவை இழந்து மினி கூவமாகவே காட்சியளித்தது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குண்டாறு இரண்டாம் கட்டமாக தூர்வாரப்பட்டது. அப்போது போது வடகரை கால்வாயையும் தூர்வார வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். வருவாய்த்துறை அமைச்சர் ஆர்பி. உதயகுமாரிடமும் இது குறித்து கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இதன் எதிரொலியாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் வடகரை கால்வாய் தூர்வாறும் பணி துவங்கியது. பிகேஎன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் அருகே துவங்கிய இந்த பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதே போல் உசிலம்பட்டி ரோட்டிலுள்ள அனுமார் கோயிலின் அருகேயும் தூர்வாரும் பணிகள் நடந்தது. இதற்காக ஜேசிபி இயந்திரம் கால்வாயில் இறங்க வசதியாக இங்கிருந்த ஷெட்டர் இடிந்தது. இதனால் அதனை அகற்றி தூர்வாரும் பணிகள் நடந்தன. பின்னர் தற்காலிகமாக மணல்மூடைகள் கொண்டு ஷெட்டர் இருந்த இடம் மூடப்பட்டது. தூர்வார ஒரு மாதகாலத்தில் நகராட்சி கழிவுநீர் வடகரை கால்வாயில் கலப்பது நிறுத்தப்படாததால், மீண்டும் தூர்வாரிய கால்வாய் கழிவுநீர் கால்வாயாக மாறியது.

கழிவுநீர் அதிகளவில் கலந்து தேங்கி நிற்பதால் வடகரை கால்வாய் மற்றும் குண்டாற்றில் தற்போது ஆகாயத் தாமரை அதிக அளவில் வளர்ந்துள்ளது. அத்துடன் அனுமார் கோயில் அருகே உடைக்கப்பட்ட ஷெட்டர் சரிசெய்யப்படவில்லை. மீண்டும் கழிவுநீர் தேங்கியுள்ளதால் இந்த பகுதியில் கொசுக்களின் கூடாரமாகவே மாறியுள்ளது. இதனால் காய்ச்சல் பரவும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, வடகரை கால்வாயில் பகுதியில் வளர்ந்துள்ள ஆகாயத் தாமரை செடிகளை அகற்றியும், நகரின் கழிவுநீர் தேங்காமலும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என திருமங்கலம் நகர மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 21-01-2018

  21-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • Hungarystudentsstruggle

  ஹங்கேரியில் கல்வி தரத்தை உயர்த்த கோரி ஆயிரக்கணக்கணக்கான மாணவர்கள் போராட்டம்

 • colambiaparaglidingworldcup

  கொலம்பியாவில் உலகக் கோப்பை பாராகிளைடிங் போட்டி: பல்வேறு பகுதியிலிருந்து வீரர்கள் உற்சாகமாக பங்கேற்பு

 • turkey_dust_storm

  துருக்கி, சிரியா ஆகிய நாடுகளில் வீசிய புழுதிப் புயல்: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

 • republic_vilaaa

  குடியரசு தின விழா : வண்ணமயமான ஒளியில் மின்னும் ராஷ்திரபதி பவன்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்