SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்ட பொங்கல்விழா: நீதிபதி கிருபாகரன் வேதனை

1/13/2018 10:25:28 AM

மதுரை, ஜன. 13: ஐகோர்ட் மதுரை கிளையில் எம்பிஏ, பெண்கள் வழக்கறிஞர் சங்கம், எம்எம்பிஏ, எம்பிஎச்ஏஏ வழக்கறிஞர்கள் சங்கங்களின் சார்பில் பொங்கல் விழா நடந்தது. நீதிபதி என்.கிருபாகரன் சி பேசுகையில், “ உலகிற்கு சோறு போடும் உழவன் எங்கிருந்தாலும், இயற்கையை வணங்க வேண்டும். உழவனுக்கு துணையாக இருக்கும் காளைகள், சூரியன் உள்ளிட்ட அனைத்திற்கும் வணங்குவதே பொங்கல்.

தமிழன் தான் ஆதிமனிதன் என்பதை உணர வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமான விழாக்கள் நடக்கும். ஆனால், இயற்கையோடு இணைந்து விழா எடுப்பது தமிழ் குடி மட்டும் தான். தற்போது பொங்கல் விழா இரண்டாம் தரத்திற்கு தள்ளப்பட்டுள்ளது” என்று பேசினார். பொங்கலும் நாமும் என்ற தலைப்பில் பேரா.சாலமன் பாப்பையா பேசினார். வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் ராமமூர்த்தி, சாமித்துரை, கிருஷ்ணவேணி, ஆனந்தவள்ளி, ஜான்வின்சென்ட், வெங்கடேசன், அழகுராம்ஜோதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-01-2018

    21-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • Hungarystudentsstruggle

    ஹங்கேரியில் கல்வி தரத்தை உயர்த்த கோரி ஆயிரக்கணக்கணக்கான மாணவர்கள் போராட்டம்

  • colambiaparaglidingworldcup

    கொலம்பியாவில் உலகக் கோப்பை பாராகிளைடிங் போட்டி: பல்வேறு பகுதியிலிருந்து வீரர்கள் உற்சாகமாக பங்கேற்பு

  • turkey_dust_storm

    துருக்கி, சிரியா ஆகிய நாடுகளில் வீசிய புழுதிப் புயல்: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • republic_vilaaa

    குடியரசு தின விழா : வண்ணமயமான ஒளியில் மின்னும் ராஷ்திரபதி பவன்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்