SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த 2 பேர் கைது

1/13/2018 10:00:27 AM

சேலம், ஜன.13: இடைப்பாடி அருகே நெடுங்குளம் எல்லமடை கானாகாடு வளைவு பகுதியில், கடந்த டிசம்பர் 1ம் தேதி  ரேஷன் அரிசி கடத்தி வந்த லாரி விபத்தில் சிக்கியது. சேலம் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், 10 டன் ரேஷன் அரிசியுடன் லாரியை பறிமுதல் செய்து, விசாரணை மேற்கொண்டனர். இதில், இடைப்பாடி, பூலாம்பட்டி பவானி பகுதிகளில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை, பதுக்கி வைத்து பெங்களூருவுக்கு கடத்தி வந்தது தெரிந்தது.
   
இது தொடர்பாக,  ஏற்காட்டைச் சேர்ந்த சிவசக்தி, செட்டிமாங்குறிச்சி கோவிந்தராஜ், சண்முகம்,கோவிந்தன், குமாரபாளையம் இளவரசன், மோளபாளையம் சக்திவேல், நாமக்கல் கோவிந்தராஜ், சண்முகம், ஹரிஹரன், டேவிட், லாரி டிரைவர் கேவசராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ரேஷன் அரிசி கடத்தலில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த இளவரசன், சக்திவேல், நாமக்கல் கோவிந்தராஜ் ஆகியோர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

இதையடுத்து தலைமறைவாக உள்ள ரேஷன் அரிசி கடத்தல் கும்பல் தலைவன் டேவிட், கோபிசெட்டிபாளையம் தாமோதரன், பெருந்துறை சேகர் ஆகியோரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த தாமோதரன், சேகரை போலீசார் கைது செய்து, சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-04-2018

    இன்றைய சிறப்பு படங்கள்

  • ShangaiConstrutionBank

    ஊழியர்கள் இல்லை...ரோபோக்களை கொண்டு தானாக இயங்கும் வங்கி: சீனாவில் தொடக்கம்

  • YemenAirstrikeSaudi

    ஏமனில் திருமண வீட்டில் சவுதிக் கூட்டுப்படைகள் தாக்குதல்: அப்பாவி பொதுமக்கள் 20 பேர் பலி

  • CherobylNuclearPowerplant

    32 ஆண்டுகளுக்கு முன் பேரழிவை உண்டாக்கிய செர்னோபில் அணுமின் நிலையத்தின் தற்போதயை நிலை: புகைப்படங்கள் வெளியீடு

  • ImmanueltrumpMeet

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சந்திப்பு: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்