SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சேலத்தில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் 2 சகோதரிகள் பலி பிறந்த நாளுக்கு துணி எடுத்து சென்ற போது பரிதாபம்

1/13/2018 10:00:18 AM

சேலம், ஜன.13:  சேலத்தில், பிறந்த நாளுக்கு துணி எடுத்து கொண்டு வீட்டுக்கு திரும்பும் போது, இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில், சகோதரிகள் இருவர் பலியாகினர். சேலம் சித்தனூர் அருகே தளவாய்ப்பட்டியை சேர்ந்தவர் சேகர். சேலம் ஆவினில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சரஸ்வதி. இவர்களது மகள்கள் காயத்ரி(21), நந்தினி(16). காயத்ரி பட்டப்படிப்பு முடித்துள்ள நிலையில், நந்தினி சூரமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று, பள்ளியில் நடந்த சிறப்பு வகுப்புக்கு நந்தினி சென்றிருந்தார். இந்நிலையில், வரும் 20ம் தேதி காயத்ரிக்கு பிறந்த நாள் என்பதால், நேற்று மாலை அவரது தாயார் சரஸ்வதியுடன் புதுத்துணி எடுக்க சூரமங்கலத்திற்கு இருசக்கர வாகனத்தில் வந்தனர். வாகனத்தை காயத்ரி ஓட்டி வந்தார். கடையில் துணியை வாங்கிய பின்னர், தாயை பஸ்சில் ஏற்றி வீட்டுக்கு அனுப்பிய காயத்ரி, பள்ளியில் இருந்து தங்கை நந்தினியை அழைத்துக் கொண்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

 சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் முன்பு உள்ள மேம்பாலத்தில் சென்ற போது, அயோத்தியாப்பட்டணத்தில் இருந்து தாரமங்கலம் நோக்கி மின்னல் வேகத்தில் சென்ற சிமெண்ட் கலவை கலக்கும் லாரி, இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், காயத்ரி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நந்தினியை, அருகில் இருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவரும் பரிதாபமாக உயிரிழந்தார்.  தகவலறிந்த சூரமங்கலம் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர். பிறந்த நாளுக்கு துணி எடுக்க வந்த போது, சகோதரிகள் இருவர் விபத்தில் பலியான சம்பவம், உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • thaliland_boyshome

    தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்களும் வீடு திரும்பினர்

  • gujaratheavyrain

    குஜராத் மாநிலம் கிர்சோம்நாத் பகுதியில் பலத்தமழை : பொதுமக்கள் பாதிப்பு

  • vintage_car_gurgaon

    பழங்குடிப் பொருட்களிலிருந்து விண்டேஜ் கார்கள் வரை... பல்வேறு வகையான கலைப்பொருட்களை உள்ளடக்கிய குர்கான்!

  • public_trans_venen

    வெனிசுலாவில் அரசு பேருந்துக்கு கடும் கிராக்கி: மக்கள் நாய் வண்டியில் ஏறிச் செல்லும் அவலம்!

  • Manilarainstorm

    பிலிப்பைன்ஸில் கனமழை மற்றும் புயல்: வெள்ளக்காடான மணிலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்