SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முதல்படை வீடான திருப்பரங்குன்றத்தில் ரயில்மோதி 3 ஆண்டுகளில் 70 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

1/12/2018 7:58:04 AM

திருப்பரங்குன்றம், ஜன.12: மதுரை  திருப்பரங்குன்றத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 70க்கும் மேற்பட்டோர் ரயில் மோதி  உயிரிழந்துள்ளனர். இதற்கு போக்குவரத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியமே காரணமென பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். முருகப் பெருமானின் முதல் படை வீடான மதுரை திருப்பரங்குன்றத்தில் ரயில் நிலையம் உள்ளது. இதனைக் கடந்து தான் தென் மாவட்ட ஊர்களான நெல்லை, செங்கோட்டை, தூத்துக்குடி, நாகர்கோவில், கன்னியாகுமரி மற்றும் கேரளாவின் திருவனந்தபுரம், குருவாயூர் செல்லும் ரயில்கள் அனைத்தும் வந்து செல்கின்றன.

இவ்வழியாக சராசரியாக ஒரு நாளைக்கு 24 ரயில்கள் கடந்து செல்கின்றன. கோயில் நகரமான திருப்பரங்குன்றத்திற்கு பஸ், கார், டூவீலர் என பல்வேறு வாகனங்களில் ஏராளமான பக்தர்கள்  வந்து செல்கின்றனர். இவர்களில்  பஸ் மற்றும் ஷேர் ஆட்டோ மூலம் வந்து செல்லும்  பக்தர்களின்  எண்ணிக்கையே அதிகமாகும். இவ்வாறு வரும் பக்தர்கள் திருமங்கலம்  பைபாஸ் சாலையில் உள்ள வெயிலுக்கு உகந்த அம்மன் கோயில் மற்றும் தியாகராசர்  கல்லூரி செல்லும் வழி ஆகிய இரண்டு நிறுத்தங்களில் இறங்கி ரயில் தண்டவாளத்தை கடந்து திருப்பரங்குன்றம் செல்கின்றனர்.
 
இவ்வாறு தண்டவாளத்தை கடக்க முற்படும் போது ரயிலில் அடிபட்டு இறந்து போகும்  சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. இதில் பெரும்பாலும் 50 வயதை கடந்த முதியவர்களே ரயில் வருவதை கணிக்க முடியாமல் ரயிலில் சிக்கி இறக்க நேரிடுகிறது. இதுகுறித்து இப்பகுதியை சேர்ந்த சரவணன் கூறுகையில்,”  கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் சுமார் 70க்கும் மேற்பட்டோர் இப்பகுதியில் ரயில் தண்டவாளத்தை கடக்கும் போது இறந்துள்ளனர். திருப்பரங்குன்றம் வழியாக செல்லும் பஸ்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்களை நகரின் வழியாக மட்டுமே செல்ல அனுமதிக்க வேண்டும். அதே போல் பைபாஸ் சாலையில் திருமங்கலம் சென்று வரும் பஸ்கள்  அனைத்தும்  தியாகராசர் கல்லூரி மற்றும் வெயிலுக்கு உகந்த அம்மன் பஸ் ஸ்டாப் போன்ற இடங்களில் நிற்க கூடாது. மேலும் அங்குள்ள தற்காலிக பஸ் நிறுத்தத்தை அகற்ற வேண்டும்.  

மேலும் திருப்பரங்குன்றம் ரயில் நிலையம் அருகே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும். அத்துடன் ரயில் நிலையத்தின் உள்ளே தண்டவாளத்தை கடக்க நடைமேடை அமைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் பெருமளவு உயிர் சேதத்தை தடுக்க முடியும்” என்று தெரிவித்தார். இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும், போக்குவரத்து காவல்துறை, போக்குவரத்து கழகம், மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சம்பந்தபட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து உயிர் பலியை தடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • france_park_machine

  பிரான்ஸ் நாட்டில் ஹாலிவுட் படக்காட்சிகளை போல் வடிவமைக்கப்பட்ட எந்திர பூங்கா!

 • madurai_meenut11

  மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா: மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் விதி உலா

 • berlin_bomb_war

  இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு, பெர்லின் நகரில் கண்டுபிடிப்பு!

 • 10schooldata

  10ம் வகுப்பு பொதுதேர்வு நிறைவு எதிரொலி : மாணவர்கள் கலர் தூவி பிரியா நட்பை வெளிப்படுத்தி மகிழ்ந்தனர்

 • governor_palace11

  பெண்களை இழிவுப்படுத்தும் ஹெச்.ராஜா, எஸ்.வி. சேகரை கண்டித்து ஆளுநர் மாளிகை முற்றுகையிட்டு போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்