SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நிர்ணயத்தொகை அதிகம் என குற்றச்சாட்டு: 38 குவாரிகள் ஏலம் போகவில்லை; அதிகாரிகள் அதிர்ச்சி

1/12/2018 7:57:54 AM

மதுரை, ஜன. 12: மதுரையில் கல்குவாரி ஏலத் தொகை பல மடங்கு உயர்வால் 38 குவாரிகள் ஏலம் போகவில்லை. 7 குவாரிகள் மட்டுமே ஏலம் போனது.   மதுரை மாவட்டத்தில் மொத்தம் 45 கல்குவாரிகள் உள்ளன. இவை 3 மற்றும் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏலம் விடப்படும். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு குவாரியின் ஏலத் தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சத்திற்குள் இருந்தது.

கிரானைட் முறைகேடு ஏற்பட்டதை தொடர்ந்து குவாரியில் நல்ல வருமானம் வருகிறது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படாமல் இருக்க 5 மடங்கு உயர்த்தி ஏலத்தொகை நிர்ணயிக்கப்பட்டது. கனிமவளத்துறையின் பரிந்துரைப்படி கலெக்டர் இதற்கான ஏலத் தொகையை உயர்த்தினார்.  மாவட்டத்தில் உள்ள 45 குவாரிகளுக்கான ஏலம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் குணாளன், ஆர்டிஓ கார்த்திகேயன், கனிமவளத்துறை இணை இயக்குநர் சிற்றரசு மற்றும் ஊராட்சி உதவி இயக்குநர் ஆகியோர் ஏலம் நடத்தினர். ஏலம் எடுக்க காலையில் கூட்டம் அலைமோதியது. போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

ஏலம் எடுக்க வந்தவர்கள் அரங்கில் நுழைந்ததும் அவர்கள் நினைத்த தொகைக்கு ஏலம் கேட்டனர். ஆனால், அரசு நிர்ணயித்த தொகை அதைவிட பல மடங்கு கூடுதலாக இருந்தது. அதாவது ஏலத்தொகை குறைந்த பட்சம் ரூ.30 லட்சமாகவும், அதிக பட்சம் ரூ.1 கோடியே 50 லட்சத்திற்கு மேல் இருந்தது. இதனால் பல குவாரிகளுக்கு அரசு நிர்ணயித்த தொகைக்கு ஏலம் எடுக்க மறுத்து ஏலதாரர்கள் வெளியேறினர்.

இதுகுறித்து ஏலதாரர் மணிகண்டன் கூறுகையில்,  ‘‘வாடிப்பட்டியில் கடந்த ஆண்டு ரூ.31 லட்சத்திற்கு போன குவாரியை இந்த முறை ரூ.82 லட்சத்திற்கு அரசு நிர்ணயம் செய்துள்ளது. இந்த அளவுக்கு குவாரியை ஏலத்தில் எடுத்தால், எங்களுக்கு நஷ்டம் ஏற்படும். இதனால் எடுக்க மறுத்து வெளியேறிவிட்டேன், இதுபோன்று அனைத்து குவாரிக்கும் ஏலத் தொகை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. குவாரி ஏலம் போக வேண்டும் என்றால், அரசு நிர்ணயித்த தொகையை குறைக்க வேண்டும்” என்றார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SnakesDayatGuindy

    சென்னை கிண்டி பாம்புப்பண்ணையில் உலக பாம்புகள் தினம் கொண்டாடப்பட்டது

  • PMspeachshellfellwb

    மேற்குவங்கத்தில் பிரதமர் உரையின்போது கொட்டகை சரிந்து விழுந்தது: காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி

  • BastilleDaycelebration

    பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டம்: 100 விமானங்களின் சாகச நிகழ்ச்சி

  • BodyPaintingFestival

    உடல் ஓவியத் திருவிழா 2018: வித்தியாசமான தோற்றத்தில் மாடல்கள்

  • 21stAnnualMudfestival

    தென்கொரியாவில் 21வது வருடாந்திர சேறு தின விழா கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்