SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஊராட்சி அலுவலகத்தை மாற்ற எதிர்ப்பு: ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

1/12/2018 7:48:37 AM

இடைப்பாடி, ஜன.12:  இடைப்பாடியில், செட்டிமாங்குறிச்சி ஊராட்சி மன்ற கட்டடத்தை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இடைப்பாடி ஒன்றியத்தில் செட்டிமாங்குறிச்சி ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் சவுரிபாளையத்தில் செயல்பட்டு வருகிறது. சுமார் 30 ஆண்டுக்கு முன் கட்டிய கட்டடம் என்பதால், இதை இடம் மாற்ற அதிகாரிகள் தரப்பில் முடிவு செய்து அதற்கான பணிகள் தொடங்கியது. இதை அறிந்த சவுரிபாளையம் கிராமமக்கள்,

ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் வேறு பகுதியில் கட்டக்கூடாது, சவுரிபாளையத்திலேயே இருக்கும் வகையில் கட்ட வேண்டும் என கூறி, 100க்கும் மேற்பட்ட மக்கள் நேற்று இடைப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். தகவலின் பேரில் வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் சரோஜா ஆகியோரிடம், கிராமமக்கள் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதை தொடர்ந்து முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-10-2018

    21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • dussehraa_11

    நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்