SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இளம்பெண் தற்கொலை விவகாரம்:‘விசாரணையில் திருப்தி இல்லை’: பெற்றோர் குற்றச்சாட்டு

1/12/2018 7:48:29 AM

சேலம், ஜன. 12: மகள் உயிரிழப்பு விசாரணையில் திருப்தி இல்லை என பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கமிஷனரிடம் புகார் மனு கொடுத்துள்ளனர். சேலம் செவ்வாய்பேட்டை ஏ.வி.அய்யர் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (24). வெள்ளி தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி மோனிகாஸ்ரீ (20). இவர்களுக்கு சஞ்ஜித் என்ற 10 மாத ஆண் குழந்தை உள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன் மோனிகாஸ்ரீ மர்மமான முறையில் உயிரிழந்தார்.

வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதுடன், தன்னுடைய மகளை மின்சாரம் பாய்ச்சி கணவர் வீட்டார் கொன்று தூக்கில் தொங்க விட்டதாக மோனிகாஸ்ரீயின் தந்தை ரவிகுமார் செவ்வாய்பேட்டை போலீசில் புகார் செய்தார். மேலும் உடலை வாங்க மறுத்ததுடன் கலெக்டர் அலுவலகத்தில் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதையடுத்து கணவர் வெங்கடேசன், மாமனார் பிரகாஷ் ஆகியோரை தற்கொலைக்கு தூண்டியதாக செவ்வாய்பேட்டை போலீசார் கைது செய்தனர். ஆனால் அவர்கள் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தி கொன்று விட்டதாக அவரது பெற்றோர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் புகார் மனு  கொடுத்தனர். அதில், மகள் இறந்த வழக்கு விசாரணையில் தங்களுக்கு திருப்தி இல்லை எனவும், விசாரணையை துரிதப்படுத்துவதுடன் எங்களுக்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியுள்ளனர். இந்நிலையில் இவ்விவகாரத்தில் அரசியல் கட்சியின் குறுக்கீடு இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • AmazonSuperMarket

    பணியாளர்கள் இல்லாத ஆட்டோமெட்டிக் சூப்பர் மார்க்கெட்: அமேசான் நிறுவனம் திறப்பு

  • ManholeCoverJapan

    பாதாள சாக்கடையின் மூடிகளை அலங்கரித்து சாலைகளையும் அழகாக்கி வரும் ஜப்பான்..!

  • PhilippineValcanoErruption

    பிலிப்பைன்சில் உள்ள மேயான் எரிமலை வெடிக்கும் அபாயம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு..

  • WorldEconomicConference

    ஸ்விட்சர்லாந்தில் உலகப் பொருளாதார மாநாடு: பிரதமர் மோடி, நடிகர் ஷாரூக்கான் பங்கேற்பு

  • SWITZERLANDHeavySnow

    சுவிட்சர்லாந்து நாட்டில் வரலாறு காணாத பனிப்பொழிவு: சுற்றுலாப் பயணிகள் வருகை பாதிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்