SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சேலத்தில் வீட்டு உபயோக பொருட்களின் கண்காட்சி

1/12/2018 7:48:20 AM

சேலம், ஜன.12: சேலம் தெய்வீகம் திருமண மண்டபத்தில் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி  தொடங்கியது. கண்காட்சியை சேலம் நகர அனைத்து வணிகர் சங்கங்களின் பொதுச்செயலாளர் ஜெயசீலன் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். எம்.எம்.எண்டர்பிரைசஸ் மோகன் மற்றும் ராமவிலாஸ் சிட்பண்ட் தலைவர் ராமலிங்கம், தாரை.குமரவேல் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர். வரும் 14ம் தேதி வரை கண்காட்சி விற்பனை நடக்கிறது. நுகர்வோரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வீட்டு உபயோக பொருட்கள், அலங்கார பர்னிச்சர்கள், ஜவுளி ரகங்கள், உணவு வகைகள், விளையாட்டு பொருட்கள், புத்தகம், எலக்ட்ரிக்கல்ஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள்,

செல்போன், கம்யூட்டர்கள், மிக்ஸி, கிரைண்டர், குக்கர் போன்ற சமையலறை சாதனங்கள் மற்றும் அழகு சாதன பொருட்கள் என 100க்கும் மேற்பட்ட அரங்குகளில் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இங்கு வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் எண்ணற்ற பரிசுகள், தள்ளுபடி விலையிலும், ஜிஎஸ்டியில் விலை குறைவு என பல்வேறு சலுகைகள் அளிக்கப்படுகிறது. கண்காட்சியின் ஒரு பகுதியாக, சூரியன் பதிப்பக அரங்கத்தில் புத்தகங்களுக்கு 10 சதவீத தள்ளுபடியில் பல அரிய புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகிறது. கண்காட்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் அருணாச்சலம் செய்துள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-07-2018

    22-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-07-2018

    21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்