SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இறுதி பட்டியல் வெளியீடு திருச்சியில் 22 லட்சம் வாக்காளர்கள் 18,343 பேர் சேர்ப்பு, 26,702 பேர் நீக்கம்

1/11/2018 10:47:41 AM

திருச்சி, ஜன.11:  திருச்சி மாவட்டத்திற்கான இறுதி பட்டியல் நேற்று வெளியிட்டது. இதில் திருச்சி மாவட்டத்தில் 22,01,513 வாக்காளர்கள் உள்ளனர். இவற்றில் புதிதாக 18,343 நபர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 26,702 பேர் பெயர் நீக்கம் செய்யப்பட்டுளளனர். இந்திய தேர்தல் ஆணையத்தின், ஆணைப்படி 2018ம் ஆண்டின் இறுதி வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் திருச்சி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட கலெக்டர் ராஜாமணி நேற்று வெளியிட்டார். அதனை சப்-கலெக்டர் கமல்கிஷோர் பெற்றுக்கொண்டார்.

பின்னர் கலெக்டர் ராஜாமணி நிருபர்களிடம் கூறுகையில், திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் தொ டர்பான 2018ம் ஆண்டின் சிறப்பு சுருக்க முறை திருத்தம், கடந்த ஆண்டு அக்டோபர் 3ம் தேதி முதல் நடைபெற்று வந்தது. பணி முடிவடைந்ததை தொடர்ந்து இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இது அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் 10,74,806 ஆண் வாக்காளர்களும், 11,26,522 பெண் வாக்காளர்களும், 185 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 22,01,513 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு ஜனவரி 5ம் தேதி வெளியிடப்பட்ட பட்டியலில் மொத்தம் 21,97,510 வாக் காளர்கள் இடம் பெற்றிருந்தனர். பின்னர் நடந்த தொடர் திருத்தத்தின் போது 22,540 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டும், 10,178 வாக்காளர்கள் நீக்கப்பட்டும், 22,09,872 வாக்காளர்களுடன் கடந்த ஆண்டு அக்டோபர் 3ம்தேதி அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தற்போது 18,343 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டும், 26,702 வாக்காளர்கள் நீக்கப்பட்டும், 22,01,513 வாக்காளர்களுடன் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  அதிக வாக்காளர்கள் உள்ள சட்டமன்ற தொகுதியாக ரங்கத்தில் 2,88,904 வாக்காளர்களும், குறைவான வாக்காளர்கள் கொண்ட சட்டமன்ற தொகுதியாக லால்குடியில் 2,07, 494 வாக்காளர்களும் உள்ளனர்.

அந்தந்த வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து வாக்குச் சாவடிகளில் மக்கள் பார்வைக்காக வாக்காளர் பட்டியல் வைக்கப்படும் என்று கூறினார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் பழனிதேவி, அனைத்து கட்சி பிரதிநிதிகள் அன்பழகன் (திமுக),  ராவணன் (அதிமுக), சிவாஜிசண்முகம், வரதராஜன் (காங்.), காளீஸ்வரன் (பாஜக), இந்துராஜ் (மார்க்சிஸ்ட்), சுரேஷ் (இ.கம்யூ), திருப்பதி (தேமுதிக), கோவிந்தராஜ், ஜெயக்குமார் (தேசிய வாத காங்.) உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • AmazonSuperMarket

    பணியாளர்கள் இல்லாத ஆட்டோமெட்டிக் சூப்பர் மார்க்கெட்: அமேசான் நிறுவனம் திறப்பு

  • ManholeCoverJapan

    பாதாள சாக்கடையின் மூடிகளை அலங்கரித்து சாலைகளையும் அழகாக்கி வரும் ஜப்பான்..!

  • PhilippineValcanoErruption

    பிலிப்பைன்சில் உள்ள மேயான் எரிமலை வெடிக்கும் அபாயம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு..

  • WorldEconomicConference

    ஸ்விட்சர்லாந்தில் உலகப் பொருளாதார மாநாடு: பிரதமர் மோடி, நடிகர் ஷாரூக்கான் பங்கேற்பு

  • SWITZERLANDHeavySnow

    சுவிட்சர்லாந்து நாட்டில் வரலாறு காணாத பனிப்பொழிவு: சுற்றுலாப் பயணிகள் வருகை பாதிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்