SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கந்து வட்டி வசூலித்தால் 3 ஆண்டு சிறை தண்டனை கலெக்டர் எச்சரிக்கை

1/11/2018 10:47:35 AM

சென்னை, ஜன. 11: பொதுமக்களிடம் கந்து வட்டி வசூலித்தால் 3 ஆண்டு சிறை தண்டனை உள்பட கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை கலெக்டர் எச்சரித்துள்ளார். இதுகுறித்து, சென்னை மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் வெளியிட்ட செய்தி குறிப்பு: தமிழ்நாடு வட்டி விதிப்பு தடுப்பு சட்டத்தின்படி, கடன் பெற்ற நபரிடம் அதிக வட்டி வசூல் செய்யும் பைனான்சியர்கள் மீது நீதிமன்ற நடைமுறைப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சட்டப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட, அதிக வட்டி வசூலிப்பது, கடன் கொடுத்தோருக்கு இடையூறு செய்வது மற்றும் அதற்கு உதவி செய்வது சட்டப்படி குற்றம்.

அத்தகைய குற்றத்திற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.30,000 அபராதமும் விதிக்கப்படும். அதிக வட்டிக்காக கடன் கொடுத்தவரால் வலுக்கட்டாயமாக அபகரிக்கப்பட்ட அசையும் அல்லது அசையா சொத்துக்கள் கடன் பெற்றவருக்கு நீதிமன்றத்தின் மூலம் திரும்ப பெற்றுத்தரப்படும். இது சம்பந்தமாக மனு கொடுக்க ரூ.100 மட்டுமே நீதிமன்ற கட்டணமாக வசூலிக்கப்படும். எனவே, பொதுமக்கள் தாங்கள் பெற்ற கடனுக்கு மிக அதிக வட்டி வசூலிக்கப்பட்டால் மேற்படி சட்டவிதிமுறைகள்படி உரிய நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • FoamFightScotland

    முதலாம் ஆண்டு மாணவர்களை வித்தியாசமான முறையில் வரவேற்ற ஸ்காட்லாந்து பல்கலைக்கழம்: புகைப்படங்கள்

  • SALTMarchRashtrapti

    ராஷ்டிரபதி பவன் அருங்காட்சியகத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் உருவ சிலைகள்: மாணவர்கள் கண்டுகளிப்பு

  • NagoroJapanVillage

    ஜப்பானில் உள்ள தீவில் வெறிச்சோடிய கிராமத்தை பொம்மைகளால் உயிரூட்டிய பெண்: குவியும் சுற்றுலா பயணிகள்

  • FallFoilageWorld

    உலகின் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட இலையுதிர் காலத்தின் அழகிய புகைப்படங்கள்

  • WillaHurricaneMexico

    மெக்சிகோவை மிரட்டவிருக்கும் வில்லா புயல்: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்