SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பஸ்சில் ‘ரூட்டு தலை’ பிரச்னை: கத்தியுடன் சுற்றி திரிந்த கல்லூரி மாணவர் கைது

1/11/2018 10:47:24 AM

சென்னை, ஜன. 11: பஸ்சில் ‘ரூட்டு தலை’ யார் என்பதில் எதிர் தரப்பு மாணவர்களுடன் ஏற்பட்ட முன்விரோதத்தில் பூந்தமல்லி பஸ் நிலையத்தில் கத்தியுடன் சுற்றித்திரிந்த கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்தனர். சென்னை அருகே பூந்தமல்லி பஸ் நிலையத்தில் நேற்று கல்லூரி மாணவர்கள் சிலர் கத்தியுடன் சுற்றி திரிவதாக பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு விரைந்து சென்ற போலீசார் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த ஒரு மாணவனை பிடித்து சோதனை செய்தபோது அவனிடம் கத்தி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அந்த மாணவனை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.  அதில், அவர் நந்தனம் கலை கல்லூரி மாணவன் என்பதும், ஸ்ரீபெரும்புதூரை அடுத்த தண்டலம் கிராமத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. பூந்தமல்லியில் இருந்து அரசு பஸ்சில் செல்லும்போது நந்தனம் கல்லூரி மற்றும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கு இடையே பஸ்சில் யார் ‘ரூட்டு தலையாக’ இருப்பது என்பது தொடர்பாக பிரச்னை ஏற்பட்டுள்ளது. இது குறித்து இரு கல்லூரி மாணவர்களிடையே முன்விரோதம் இருந்து வந்தது.

மேலும், பஸ்சில் செல்லும் போது பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் நந்தனம் கல்லூரி மாணவர்களை மதிக்காமல் வந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சிலரை மிரட்டுவதற்காக கத்தியுடன் சுற்றி திரிந்தது தெரியவந்தது. பின்னர், அந்த மாணவனை கைது செய்த போலீசார், அவருடன் வந்த மற்ற மாணவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • thaliland_boyshome

    தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்களும் வீடு திரும்பினர்

  • gujaratheavyrain

    குஜராத் மாநிலம் கிர்சோம்நாத் பகுதியில் பலத்தமழை : பொதுமக்கள் பாதிப்பு

  • vintage_car_gurgaon

    பழங்குடிப் பொருட்களிலிருந்து விண்டேஜ் கார்கள் வரை... பல்வேறு வகையான கலைப்பொருட்களை உள்ளடக்கிய குர்கான்!

  • public_trans_venen

    வெனிசுலாவில் அரசு பேருந்துக்கு கடும் கிராக்கி: மக்கள் நாய் வண்டியில் ஏறிச் செல்லும் அவலம்!

  • Manilarainstorm

    பிலிப்பைன்ஸில் கனமழை மற்றும் புயல்: வெள்ளக்காடான மணிலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்