SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கல்லக்குடியில் புனித அந்தோணியார் ஆலய பொங்கல் பெருவிழா துவக்கம் 18ம் தேதி தேர்பவனி

1/11/2018 10:47:22 AM

லால்குடி, ஜன.11:  லால்குடி அடுத்த கல்லக்குடி புனித அந்தோணியார் ஆலய பொங்கல் பெருவிழா நேற்றுமுன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். லால்குடி அடுத்த கல்லக்குடி புனித  அந்தோணியார் ஆலயத்தில் ஆண்டு தோறும் பொங்கல் பெருவிழா நடைபெறும். இந்த ஆண்டு பொங்கல் திருவிழா நேற்றுமுன்தினம் (9ம் தேதி) மணியளவில் கும்பகோணம் மறைமாவட்ட ஆயர் இல்ல அருட்தந்தையர்கள் ஆரோக்கியசாமி, ராபர்ட், மரிய ஜோமிக்ஸ்ராவியோ ஆகியோர் கொடியை புனிதப்படுத்தி  கொடியேற்றி பொங்கல் திருவிழாவை துவங்கி வைத்தனர்.

பின்னர் ஆலயத்தில் கூட்டுப்பாடல் திருப்பலி நடைபெற்றது. விழா நாட்களில் தினமும் மாலை 6.30 மணியளவில்  அருட்தந்தையர் தலைமையில் நவநாள் மற்றும் கூட்டு பாடல் திருப்பலி நடைபெறுகிறது. வருகிற 17ம் தேதி  மாலை 4.30 மணியளவில்  ஜெயங்கொண்டம் மறைவட்ட முதன்மைகுரு கோஸ்மான் ஆரோக்கியராஜ் தலைமையில் திருவிழா ஆடம்பர திருப்பலியும், பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும், இரவு 9.30 மணியளவில் ஆடம்பர சப்பர பவனியும் நடைபெறுகிறது.

18ம்தேதி மாலை 4.30 மணியளவில்  அருட்தந்தை அடைக்கலராஜ் தலைமையில்  பெருவிழா திருப்பலி  நடைபெறுகிறது. தொடர்ந்து பெரியதேர் பவனியும், மாலை 6 மணியளவில் திவ்ய நற்கருணை ஆசீர்வாதமும், தொடர்ந்து கொடி இறக்கமும் நடைபெறும். விழாவில் கல்லக்குடியை சுற்றியுள்ள பொதுமக்கள் கலந்து கொண்டனர். பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஆலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • FallFoilageWorld

    உலகின் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட இலையுதிர் காலத்தின் அழகிய புகைப்படங்கள்

  • WillaHurricaneMexico

    மெக்சிகோவை மிரட்டவிருக்கும் வில்லா புயல்: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

  • italyrain

    இத்தாலியில் பெய்த ஆலங்கட்டி மழை : பனிக்கட்டிகள் இறுகி பாறை போல் காட்சியளித்த சாலைகள்

  • 23-10-2018

    23-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • longestseabridge

    உலகில் எங்கும் இல்லாத தனிச்சிறப்புடன் கட்டி முடிக்கப்பட்ட உலகின் நீளமான கடல் பாலம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்