SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போக்குவரத்து தொழிலாளர் 7வது நாளாக ஸ்டிரைக் மாவட்டத்தில் 55% பஸ்களே இயக்கம்

1/11/2018 10:41:24 AM

கோவை, ஜன. 11: போக்குவரத்து தொழிலாளர்கள் 7வது நாளாக நேற்றும் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். அதனால் குறைந்த அளவிலே அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. கோவை மாநகரில் 332 பஸ்களும், புறநகர் பகுதியில் 272 பஸ்களும் ஓடின. மொத்தம் 1070 பஸ்கள் ஓடியிருக்க வேண்டும். ஆனால், 604 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டது. 55 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. இதனால் இயக்கப்பட்ட அரசு பஸ்கள், தனியார் பஸ்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

நேற்று காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி, மாணவ மாணவிகளின் கூட்டம் பஸ்களில் அலைமோதியது. கூட்டநெரிசலில் படிக்கட்டியில் தொங்கியபடி பயணித்தனர். தற்காலிக கண்டக்டர்கள், எந்தந்த ஸ்டேஜ்க்கு டிக்கெட் எவ்வளவு கொடுப்பது என தெரியாமல் மக்களிடமே கேட்டு டிக்கெட் கொடுத்து வருகின்றனர். மேலும் கட்டணம் தெரியாமல் கூடுதலாகவும் வசூலித்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் மற்றும் தற்காலிக கண்டக்டர்களிடையே ஆங்காங்கே தகராறு ஏற்பட்டு வருகிறது.

தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, சூலூர் உள்ளிட்ட புறநகர பகுதிகளில் மினிடெம்போ, சரக்கு ஆட்டோ உள்ளிட்ட சரக்கு வாகனங்களில் பொதுமக்கள் பயணித்து வருகின்றனர். பள்ளி மாணவ மாணவிகள் கூட சரக்கு வாகனங்களில் ஆபத்தை உணராமல் பயணித்து வருகின்றனர். இந்த ஆபத்தான பயணத்தை தவிர்க்கும்படி வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். தொழிலாளர்களின் ஸ்டிரைக்கினால் பொதுமக்கள் முறையான போக்குவரத்து வசதி கிடைக்காமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-04-2018

    இன்றைய சிறப்பு படங்கள்

  • ShangaiConstrutionBank

    ஊழியர்கள் இல்லை...ரோபோக்களை கொண்டு தானாக இயங்கும் வங்கி: சீனாவில் தொடக்கம்

  • YemenAirstrikeSaudi

    ஏமனில் திருமண வீட்டில் சவுதிக் கூட்டுப்படைகள் தாக்குதல்: அப்பாவி பொதுமக்கள் 20 பேர் பலி

  • CherobylNuclearPowerplant

    32 ஆண்டுகளுக்கு முன் பேரழிவை உண்டாக்கிய செர்னோபில் அணுமின் நிலையத்தின் தற்போதயை நிலை: புகைப்படங்கள் வெளியீடு

  • ImmanueltrumpMeet

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சந்திப்பு: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்