SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விஷ மாத்திரையால் 3 பேர் பலி உயிருக்கு போராடிய மூதாட்டியும் சாவு

1/11/2018 10:41:16 AM

கோவை, ஜன.11: கோவை சிங்காநல்லூர் நீலிக்கோனாம்பாளையம் அருகேயுள்ள  ஆர்.கே.கே. நகரை சேர்ந்தவர் சுப்ரமணியம். இவர் சில ஆண்டிற்கு முன் இறந்து விடார். இவரது இரண்டாவது மனைவி பாக்கியம் (65).  சுப்ரமணியத்தின் முதல் மனைவிக்கு பிறந்தவர் சாந்தி (50). திருமணமாகாத இவர், பாக்கியத்துடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். பாக்கியத்தின் தம்பி மணி (54) என்பவர் ரியல் எஸ்டேட் புரோக்கராக இருந்தார். சில ஆண்டுக்கு முன் மணி இடம் வாங்குவதற்காக தனது அக்கா மகளான சாந்தியிடம் ரூ.4.50 லட்சம் கடன் வாங்கியிருந்தார்.

இந்த தொகையை சாந்தியிடம் மணி திருப்பி தரவில்லை. பணத்தை விரைவாக தரவேண்டும் என சாந்தி, மணியிடம் கூறியுள்ளார். பணம் தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், பாக்கியம், சாந்தி ஆகியோர் கால் மூட்டு வலிக்கு மருந்து சாப்பிட்டு வந்தனர். கடந்த 9ம் தேதி இரவு மணி, தனது அக்கா பாக்கியம், சாந்தி ஆகியோரை சந்தித்தார். அப்போது அவர் தென்னை மரத்துக்கு வைக்கும் சல்பைடு விஷ மாத்திரை வாங்கி வந்து அதில் தேன், நாட்டு சர்க்கரை ஆகியவற்றை கலந்து கால் வலி மருந்து என கொடுத்துள்ளார்.  

இதனை பாக்கியம், சாந்தி ஆகியோர் சாப்பிட்ட பின்னர் மயங்கி விழுந்தனர். இதை தொடர்ந்து மணியும் விஷம் கலந்த மருந்தை சாப்பிட்டார்.  3 பேரும் மயங்கி வீட்டில் கிடப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் மணி, சாந்தி ஆகியோர் நேற்று முன்தினம் இறந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பாக்கியம் நேற்று காலை இறந்தார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • FoamFightScotland

    முதலாம் ஆண்டு மாணவர்களை வித்தியாசமான முறையில் வரவேற்ற ஸ்காட்லாந்து பல்கலைக்கழம்: புகைப்படங்கள்

  • SALTMarchRashtrapti

    ராஷ்டிரபதி பவன் அருங்காட்சியகத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் உருவ சிலைகள்: மாணவர்கள் கண்டுகளிப்பு

  • NagoroJapanVillage

    ஜப்பானில் உள்ள தீவில் வெறிச்சோடிய கிராமத்தை பொம்மைகளால் உயிரூட்டிய பெண்: குவியும் சுற்றுலா பயணிகள்

  • FallFoilageWorld

    உலகின் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட இலையுதிர் காலத்தின் அழகிய புகைப்படங்கள்

  • WillaHurricaneMexico

    மெக்சிகோவை மிரட்டவிருக்கும் வில்லா புயல்: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்