SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாநகரில் சாரல் மழை

1/11/2018 10:41:08 AM

கோவை, ஜன.11: கோவை மாநகரில் கடந்த சில தினங்களாக பனிப்பொழிவு அதிகளவில் இருந்து வருகிறது. காலை 8 மணி வரை சூரிய வெளிச்சம் வெளியே தெரியாத வண்ணம் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டப்படியே பயணிக்கின்றன. இந்நிலையில், நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலையில் சில இடங்களில் காற்றின் வேகம் அதிகரித்து இருந்தது. தொடர்ந்து குளிர்ந்த காலநிலையை நிலவியது.

இந்நிலையில், இரவு 10 மணிக்கு மேல் உக்கடம், டவுன்ஹால், அவினாசி சாலை, பீளமேடு, வடகோவை, சுந்தராபுரம், ராமநாதபுரம், கவுண்டம்பாளையம் உள்பட மாநகரின் பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்தது. தொடர்ந்து பெய்த மழையினால் சாலையில் ஆங்காங்கே சிறிய அளவில் மழைநீர் தேங்கியது. போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக் காரணமாக மாநகரில் இரவு நேரத்தில் குறைந்தளவே பேருந்துகள் இயக்கபட்டு வந்தன. இதனால் கிராமப்புற பகுதி தொழிலாளர்கள் பஸ் கிடைக்காது  இரவு முழுவதும் வாட்டும் குளிர் மற்றும் சாரல் மழையால் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-04-2018

    இன்றைய சிறப்பு படங்கள்

  • ShangaiConstrutionBank

    ஊழியர்கள் இல்லை...ரோபோக்களை கொண்டு தானாக இயங்கும் வங்கி: சீனாவில் தொடக்கம்

  • YemenAirstrikeSaudi

    ஏமனில் திருமண வீட்டில் சவுதிக் கூட்டுப்படைகள் தாக்குதல்: அப்பாவி பொதுமக்கள் 20 பேர் பலி

  • CherobylNuclearPowerplant

    32 ஆண்டுகளுக்கு முன் பேரழிவை உண்டாக்கிய செர்னோபில் அணுமின் நிலையத்தின் தற்போதயை நிலை: புகைப்படங்கள் வெளியீடு

  • ImmanueltrumpMeet

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சந்திப்பு: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்