SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சனத்குமார நதி கால்வாயை தூர்வார கோரிக்கை

12/18/2017 10:48:50 AM

தர்மபுரி, டிச.18: தர்மபுரி நகரின் வழியாக செல்லும் சனத்குமாரநதியின் கால்வாய்களை தூர்வார வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் தென்பெண்ணையின் துணை நதிகளில் முக்கியமான நதி சனத்குமார நதி. வத்தல்மலை அடிவாரத்தில் நீர்பிடிப்பு பகுதியாக இந்த நதி உள்ளது. மலைப்பகுதி அடிவாரத்தில் இருந்து ஓடி வரும் நீர் பெரியஏரி, அதியமான்கோட்டை ஏரி, ஏமகுட்டியூர் மற்றும் தர்மபுரி நகரத்தின் வழியாக சென்று கம்பைநல்லூரை கடந்து இருமத்தூர் தென்பெண்ணை ஆற்றில் கலக்கிறது.

கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் சனத்குமார நதியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. மேலும் நிலத்தடி நீரும் உயர்ந்தது. பருவகால மாற்றத்தால் மழை குறைந்தது. நதியின் கால்வாய் முறையாக பராமரிப்பு செய்யாததால், ஆக்கிரமிப்பு மற்றும் சாக்கடை கழிவுநீர் ஓடும் பகுதியாக மாறியது. இதனால் தொற்று நோய் பரவும் இடமாக கால்வாய் மாறியது. தற்போது கால்வாய் இருக்கும் இடமே தெரியாத அளவிற்கு புதர் மண்டி உள்ளது. எனவே, கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • perufloodrain

    பெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • himachal

    இமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்

  • navamkolumpu

    கொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்

  • araliparaijallikattu

    அனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்!

  • dakkafire

    வங்கதேச தலைநகர் டாக்காவில் அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து : 69 பேர் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்