SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொல்லிமலை அரசு பள்ளியில் அதிகாரிகள் ஆய்வு

12/11/2017 10:24:51 AM

ராசிபுரம், டிச.11: கொல்லிமலையில் அரசு பள்ளியில் கல்வி அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தி, கற்றல் குறைபாடுகளை சீர்படுத்த ஆலோசனை வழங்கினர். நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் அறிவு திறன், கற்பித்தல் பணிகள் நூறுசதவீதம் முழுமையாக உள்ளதா? என்பதை உறுதிபடுத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் ஒன்றியம் வாரியாக அரசு பள்ளிகளில் ஆய்வு நடத்தி வருகின்றனர். கொல்லிமலையில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா தலைமையில் கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அதில், கற்றல் குறைவாக உள்ள மாணவர்களுக்கு கற்பித்தல் முறைகள் விரிவாக விளக்க வேண்டும் எனவும், மாணவர்களுக்கு உரிய பயிற்சிகளை வழங்கவும் உத்தரவிடப்பட்டது. இந்த ஆய்வில், அனைவருக்கும் கல்வி இயக்க உதவி திட்ட அலுவலர் சரவணன், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் செல்வராஜ், உதவி தொடக்க கல்வி அலுவலர் அருள், அணைவருக்கும கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவராமன், மேற்பார்வையாளர் ரமேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் கம்ப்யூட்டர்களின் பயன்பாடு, நூலக வசதி, கழிவறை வசதிகள் மற்றும் கட்டட பணிகளை ஆய்வு செய்தனர்.  இதனை தொடர்ந்து அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாணவர்களுக்கு தேவையான உதவிகள் செய்ய ஆலோசனை வழங்கப்பட்டது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SnakesDayatGuindy

    சென்னை கிண்டி பாம்புப்பண்ணையில் உலக பாம்புகள் தினம் கொண்டாடப்பட்டது

  • PMspeachshellfellwb

    மேற்குவங்கத்தில் பிரதமர் உரையின்போது கொட்டகை சரிந்து விழுந்தது: காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி

  • BastilleDaycelebration

    பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டம்: 100 விமானங்களின் சாகச நிகழ்ச்சி

  • BodyPaintingFestival

    உடல் ஓவியத் திருவிழா 2018: வித்தியாசமான தோற்றத்தில் மாடல்கள்

  • 21stAnnualMudfestival

    தென்கொரியாவில் 21வது வருடாந்திர சேறு தின விழா கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்