SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கல்விக்கடன் வழங்க மறுக்கும் அதிகாரிகள்

12/11/2017 10:24:35 AM

நாமக்கல், டிச.11: நாமக்கல் மாவட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கு கல்விக்கடன் வழங்க மறுக்கும் வங்கிகள் மீது கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, காங்கிரசார் கோரிக்கை விடுத்துள்ளனர். நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஷேக்நவீத் கூறியிருப்பதாவது: நாமக்கல்லில், கடந்த மாதம் 29ம் தேதி நடந்த மாநில சிறுபான்மையினர் ஆணைக்குழு கூட்டத்தில், தகுதியுள்ள மாணவ, மாணவிகளுக்கு கல்விக்கடன் வழங்க வேண்டுமென அனைத்து வங்கிகளுக்கும் கலெக்டர் அறிவுரை வழங்கினார். ஆனால், இன்றுவரை நாமக்கல் மாவட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கு கல்விக்கடன் வழங்க வங்கி அதிகாரிகள் யோசிக்கின்றனர்.

இதனால் விரும்பிய படிப்பை தொடர முடியாமல், மாணவ, மாணவிகள் தவிக்கின்றனர். அதேபோல் 10 ரூபாய் நாணயங்களை வங்கிகள் வாங்குவதில்லை. ரிசர்வ் வங்கி தடை விதிக்காத நிலையில், ₹10 நாணயங்களை பெற வங்கிகள் மறுப்பது, மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, ₹10 நாணயங்களை வாங்கவும் வங்கிகளுக்கு கலெக்டர் உத்தரவிட வேண்டும். கடந்த 5 ஆண்டுக்கும் மேலாக மனு கொடுத்தும், பாவடித்தெருவை சேர்ந்த மாற்றுத்திறனாளி சபி, மாணவர் அப்பாஸ் ஆகியோருக்கு உதவித்தொகை கிடைக்கவில்லை. இதுகுறித்து விசாரித்து கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • france_park_machine

    பிரான்ஸ் நாட்டில் ஹாலிவுட் படக்காட்சிகளை போல் வடிவமைக்கப்பட்ட எந்திர பூங்கா!

  • madurai_meenut11

    மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா: மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் விதி உலா

  • berlin_bomb_war

    இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு, பெர்லின் நகரில் கண்டுபிடிப்பு!

  • 10schooldata

    10ம் வகுப்பு பொதுதேர்வு நிறைவு எதிரொலி : மாணவர்கள் கலர் தூவி பிரியா நட்பை வெளிப்படுத்தி மகிழ்ந்தனர்

  • governor_palace11

    பெண்களை இழிவுப்படுத்தும் ஹெச்.ராஜா, எஸ்.வி. சேகரை கண்டித்து ஆளுநர் மாளிகை முற்றுகையிட்டு போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்