SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

4 கடைகளை உடைத்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு: முகமூடி கொள்ளையர்கள் அட்டூழியம்

12/11/2017 10:22:32 AM

மதுரை, டிச. 11: மதுரை மீனாட்சியம்மன் கோயில் அருகே அடுத்தடுத்து 4 கடைகளை உடைத்து ரூ. 5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருடிய முகமூடி கொள்ளைக் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை மீனாட்சியம்மன் கோயில் மேற்கு நுழைவு வாயில் அருகேயுள்ள அன்னகுழி மண்டபம் தெருவில் வடமாநிலத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் பாசி, வளையல், பொம்மை உள்ளிட்ட பல வகையான கடைகளை வைத்துள்ளனர். இங்கு மொத்தமாவும், சில்லரையாகவும் விற்பனை நடைபெறுகிறது. நேற்று முன்தினம் இரவு வியாபாரத்தை முடித்து விட்டு கடையை பூட்டி விட்டு சென்றனர். நேற்று காலையில் கடையை திறக்க வந்தபோது, அடுத்தடுத்து 4 கடைகளில் முன் பக்க கதவுகளை உடைத்து பொருட்கள் மற்றும் பணம் திருடு போனது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து திலகர் திடல் போலீசில் கடை உரிமையாளர்கள் புகார் கொடுத்தனர்.

இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். போலீசார் கூறுகையில்,’ நன்கு தெரிந்த நபர்கள் தான் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். 2 கடைகளில் ரூ.50 ஆயிரம் மற்றும் ஒரு கடையில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள பொருட்களை திருடியுள்ளனர். கடைகளில் உள்ள கண்காணிப்பு கேமராவை சோதனை செய்தபோது, முகமூடி அணிந்த 2 வாலிபர்கள் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் தொடர்ந்து கடைக்கு வந்து சென்ற நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • aerospaceexpoberling

    பெர்லிங்கில் சர்வதேச ஏரோஸ்பேஸ் கண்காட்சி : பல்வேறு நாடுகளின் புதுமையான கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன

  • accidentkushinagar

    உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகரில் பள்ளிப்பேருந்து மீது ரயில் மோதிய விபத்தில் 11 மாணவர்கள் உயிரிழப்பு

  • karanisvararfestival

    மயிலாப்பூர் காரணீஸ்வரர் கோவில் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு தேர் திருவிழா

  • cmathleticstale

    மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை தடகள போட்டி : அமைச்சர் பாலகிருஷ்ணா தொடங்கி வைத்தார்

  • tiruchurpooram

    கேரளாவில் பிரசித்திப் பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா : கோலாகலமாக நடந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்