SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முருகனின் முதல்படை வீட்டில் பார்க்கிங் வசதி இல்லாமலே வாகனங்களுக்கு கட்டணம் வசூல்: சுற்றுலாப்பயணிகள், பக்தர்கள் குற்றச்சாட்டு

12/11/2017 10:22:22 AM

திருப்பரங்குன்றம், டிச.11: முதல்படை வீடான திருப்பரங்குன்றத்தில் பார்க்கிங் வசதி இல்லாமல், நுழைவு கட்டணம் வசூலிப்பதாக பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் முருகனின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடாக உள்ளது. நவம்பர் முதல் ஜனவரி வரையிலான மூன்று மாதங்களில் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருவார்கள். இவர்கள் பெரும்பாலும் வேன், பஸ் போன்றவற்றில் வருவது வழக்கம். திருப்பரங்குன்றத்தில் நுழைவதற்கு வேன் ஒன்றுக்கு 50 ரூபாயும், பஸ்சிற்கு 100 ரூபாயும் கட்டணமாக மாநகராட்சி சார்பில் வசூலிக்கப்படுகிறது.

இந்த நுழைவுச் சீட்டில் டூரிஸ்ட் வாகன நிறுத்துமிடத்திற்கான நுழைவுச் சீட்டு என அச்சிடப்பட்டு பணம் வசூல் செய்யப்படுகிறது. ஆனால், பார்க்கிங் வசதி செய்து தராமல் சாலையின் ஓரத்தில் வாகனங்களை நிறுத்த சொல்வதாக வெளியூரில் இருந்து இங்கு வரும் பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து நாமக்கல்லை சேர்ந்த பக்தர் பன்னீர்செல்வம் கூறுகையில், “ நாங்கள் சபரிமலை சென்று விட்டு திருச்செந்தூர் வழியாக திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சாமி கும்பிட வந்தோம். இங்கு பார்க்கிங் கட்டணமாக ஒரு நாளைக்கு ரூ.100 வசூலிக்கின்றனர். ஆனால் பார்க்கிங் வசதி இல்லை. எனவே, எங்கள் பஸ்சை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு கோயிலுக்கு சென்று வந்தோம்.

ஆனால், சாலையின் ஒரமாக பஸ்சை நிறுத்தக்கூடாது என போலீசார் வலியுறுத்துகின்றனர். முருகனின் முதல் படை வீட்டிற்கு வரும் பக்தர்களிடம் வாகனத்திற்காக ரூ.100 வசூல் செய்வது பார்க்கிங் கட்டணமா அல்லது மாநகராட்சி சுங்க கட்டணம் வசூலிக்கிறதா?” என கேள்வி எழுப்பினார்.
திருப்பரங்குன்றத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் முருகேசன் கூறுகையில், “ பார்க்கிங் வசதி இல்லாமல் பார்க்கிங் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. தமிழகத்தின் மிக முக்கிய சுற்றுலாத் தலமான திருப்பரங்குன்றத்தில் பார்க்கிங் வசதி இல்லாததால் இங்கு வரும் வாகனங்கள் சாலைகளில் ஆங்காங்கே நிறுத்தப்படுகிறது.  இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இதனால் கடும் அவதிக்குள்ளாவதாகி வருகின்றனர். குறிப்பாக, காலையில் பள்ளி செல்லும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அவசர கால ஊர்திகளான ஆம்புலன்ஸ் போன்றவை செல்வதிலும் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.  வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்படுவதால் கிரிவலப் தை முழுவதும் திறந்த வெளி கழிப்பறையாக மாறி வருகிறது. கடந்த ஆண்டே மாவட்ட ஆட்சியர் தலைமையிலான கூட்டத்தில் இது குறித்து எடுத்துக் கூறியும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை” என கூறினார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • france_park_machine

  பிரான்ஸ் நாட்டில் ஹாலிவுட் படக்காட்சிகளை போல் வடிவமைக்கப்பட்ட எந்திர பூங்கா!

 • madurai_meenut11

  மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா: மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் விதி உலா

 • berlin_bomb_war

  இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு, பெர்லின் நகரில் கண்டுபிடிப்பு!

 • 10schooldata

  10ம் வகுப்பு பொதுதேர்வு நிறைவு எதிரொலி : மாணவர்கள் கலர் தூவி பிரியா நட்பை வெளிப்படுத்தி மகிழ்ந்தனர்

 • governor_palace11

  பெண்களை இழிவுப்படுத்தும் ஹெச்.ராஜா, எஸ்.வி. சேகரை கண்டித்து ஆளுநர் மாளிகை முற்றுகையிட்டு போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்